பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை: இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 'டயாலிசிஸ்' சிகிச்சை இல்லாததால், கொரோனா தொற்றுக்குள்ளாகும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



latest tamil news




கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கொரோனா பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையில், 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளும் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சிறப்பு சிகிச்சை அளிக்க, பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இம்மருத்துவமனையில், பல்வேறு வசதிகள் இல்லை. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கான டயாலிசிஸ் வசதி இல்லை. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில், பணிபுரியும் ஊழியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அவர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சர்க்கரை நோயாளி என்பதால் டயாசிலிசிஸ் செய்வது கட்டாயமானது. ஆனால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அதற்கான வசதி இல்லாததால், அவர் மீண்டும், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்க டாக்டர்கள் அனுமதி மறுத்தனர். டீன் உத்தரவையடுத்து அவர் அங்கு அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news



கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில், ''கொரோனா பாதிப்புக்குள்ளாகும் சர்க்கரை நோயாளிகளுக்கு டயாலிசிஸ் மேற்கொள்ள தனியாக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பிற நோயாளிகளுக்கு பிரச்னை இல்லை. மருத்துவமனையில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.


latest tamil news



இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலேயே சர்க்கரை நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு இ.எஸ்.ஐ.,யுடன் ஒப்பந்தம் செய்துள்ள மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மேற்கொள்ளப்படுகிறது. இ.எஸ்.ஐ.,யில் விரைவில், டயாலிசிஸ் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த உள்ளோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - chaennal,இந்தியா
06-ஜூலை-202005:34:03 IST Report Abuse
srinivasan Dialysis for kidney failure patients and not for diabetic patients
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
05-ஜூலை-202021:31:28 IST Report Abuse
siriyaar சர்க்கரை நோய் பார்ட்டிகளை அனுப்பி வையுங்க மருத்துவ செலவு குறையும் ரெடியாகி வந்து உழவா ஓட்டப்போகுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X