பொது செய்தி

தமிழ்நாடு

10, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அரசு புதிய உத்தரவு

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: 10, 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வருகை தரவில்லை எனில் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



latest tamil news



தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1ல் ஒரு பாடத்துக்கான தேர்வும், ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட பாடங்களில், காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்ததில், 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவின்படி, 20 சதவீத மதிப்பெண்களும் இணைக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும், ரத்தான பாடங்களில், மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதால், அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றதாகவே கருதப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், 10, 11ம் வகுப்பு மாணவர்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வருகை தரவில்லை எனில், ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என்று தற்போது தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
05-ஜூலை-202021:13:40 IST Report Abuse
sundarsvpr அரசின் முடிவு பாரபட்சமானது. காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாதவர்களை ஆண்டு தேர்வில் அனுமதித்தது தவறு, இவர்களுக்கு 9 வகுப்பு ஆண்டு தேர்வில் பெற்ற எண்ணத்தை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X