மேலும் 36 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா உறுதி

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 36 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு (பிஎஸ்எப்) கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் எல்லை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 10 லட்சம் துணை ராணுவ படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நோய் தொற்று அதிகரித்து எல்லையின் பாதுகாப்பு படையில் உள்ள (பிஎஸ்எப்) வீரர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பாதுகாப்பு படை (BSF) வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளதோடு, துணை ராணுவ வீரர்கள் அதிகபட்ச சுகாதாரத்தை பேணுவதோடு, பணியில் சமூக விலகலை பின்பற்றுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

தற்போது வரை பாதிக்கப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை 1,348 ஆகவும், சிகிச்சையில் உள்ளவர்கள் 526 எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒரே நாளில் நோய் பாதிப்புகளில் இருந்து 33 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை சுமார் 817 பிஎஸ்எப் வீரர்கள் குணப்படுத்தப்பட்டு மருத்துவ முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று இரண்டு எல்லை பாதுகாப்பு படையினரின் 79 பிஎஸ்எப் பணியாளர்கள் மற்றும் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி) கொரோனா தொற்றுக்கு சோதனை செய்தனர்.


latest tamil news



சுமார் 2.5 லட்சம் பணியாளர்களில் (BSF),முன்னதாக 45 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 39 பேர் குணமடைந்து உள்ளதாக தெரிவித்தனர். பாக்., மற்றும் வங்காளதேசம் உடனான எல்லையை பாதுகாக்கும் பணியை கருத்திற்கொண்டு, இந்த பணியில் உள்ள 5 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மலையேற்ற போர் பயிற்சி பெற்ற 90,000 பணியாளர்களில் கொரோனாவிற்கு 2 பேர் பலியாகினர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202023:42:35 IST Report Abuse
தல புராணம் இப்பவாவது இவர்களுக்கு சத்தான உணவு கொடுத்தால் நல்லது.. பார்டரில் பாஹஷன் செய்யும் இவர்கள் தேவையான இதை செய்வார்களா?
Rate this:
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
05-ஜூலை-202022:46:27 IST Report Abuse
தமிழ் வேந்தன் முந்த நேத்து தான் ஒருத்தர் போனார் , பரவிட்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X