பொது செய்தி

இந்தியா

21 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியை விட அதிகம்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
corona, recovery rate, 60.7 percent, 21 states, more, கொரோனா, குணமடைவோர், விகிதம், 60.7 சதவீதம், 21 மாநிலங்கள், அதிகம்

புதுடில்லி: நாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் 21 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

கொரோனா உலகையே உலுக்கி வருகிறது. ஐரோப்பா நாடுகளில் தொற்று சற்று குறைந்து வந்தாலும், அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் தொடரும் அதிகரிக்கும் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவிலிருந்து குணைமடைபவர்கள் விகிதம் தேசிய சராசரி விகிதமான 60.77 ஐ விட அதிகமாக இருப்பது சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதத்தைப் பொறுத்தவரை சண்டிகர் 85.9 சதவிகிதத்துடனும், லடாக் 82,2 விகிதத்துடனும், உத்தரகாண்ட் 80.9 சதவீதத்துடனும், சட்டீஸ்கர் 80.6 சதவீதத்துடனும், ராஜஸ்தான் 80.1 சதவீதத்துடனும், மிசோரம் 79.3 சதவீதத்துடனும் உள்ளது.


latest tamil news



இன்றைய நிலவரப்படி கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,082 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 14,856 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் 6,73,165 பேருக்கு தொற்று பாதித்த நிலையில் 2,44,814 பேர் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202023:39:32 IST Report Abuse
தல புராணம் உ.பியில் கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்.. - இதுவும் இன்றைய செய்தி தான்.. அப்போ அறிக்கையின் நம்பகத்தன்மை பற்றி என்ன சொல்வது? லஞ்சத் திருநாட்டில் உண்மைக்கு கொரோனா வந்து சாகும் தருவாயில் உள்ளதே
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
05-ஜூலை-202022:19:34 IST Report Abuse
Balasubramanian Ramanathan பெரியார் மண்ணில் மட்டும் இப்படி ஏன் அதிகமாக உள்ளது.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
05-ஜூலை-202020:44:53 IST Report Abuse
sundarsvpr குணமடைந்தோர் அதிக சதவிகிதம் என்பது மகிழ்ச்சிதான். சோதனை அளவை காட்டினால்தான் உண்மை பாதிப்பு தெரியும். அதற்கு ஏற்ப நடவடிக்கையின் தன்மை தீவிரம் அதிகரிக்கும். அப்போதுதான் பாதிப்பு விரைவில் குறையும். பொருளாதாரமும் சிறுது சிறிதாய் மேன்படும். வரும்முன் காப்போம் நம்முடைய கையில். அப்போதுதான் அரசின் நடவடிக்கை சரியான திசையில் செல்வதற்கு உதவியாய் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X