ஆம்பூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் செருப்பை, அவரது கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகி கையில் துாக்கி சென்றது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி கிராமத்தில், மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிடுவதற்காக, தி.மு.க., - எம்.எல்.ஏ., வில்வநாதன், 30ம் தேதி சென்றார்.பாதை சேறும், சகதியுமாக இருந்ததால், தன் செருப்பை கழற்றிவிட்டு, வெறும் காலில் நடந்து சென்றார்.
அப்போது, வெங்கடசமுத்திரம் ஊராட்சி, தி.மு.க., செயலர் சங்கர், எம்.எல்.ஏ.,வின் செருப்பை கையில் துாக்கி சென்றார்.தற்போது, இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. 'தலித் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகியை, செருப்பை துாக்கி வரச்சொல்வதா? சமூக நீதி பேசும், தி.மு.க.,வின் உண்மை முகம் இதுதான்' என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. தி.மு.க., ஊராட்சி செயலர் சங்கர் கூறியதாவது:பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியச் செயலராக, வில்வநாதன் இருக்கிறார். என் மனைவி அனிதா, ஒன்றிய துணைச் செயலராக இருக்கிறார். எனவே, எப்போதுமே, எம்.எல்.ஏ., உடன்தான் இருப்பேன்.தடுப்பணையை பார்க்கச் சென்றபோது, சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், செருப்பை ஓரமாக கழற்றி போட்டு, வேட்டியை துாக்கி பிடித்தபடி சென்றார். பாதையில் முட்கள் இருந்ததால், நான்தான், எம்.எல்.ஏ., செருப்பை எடுத்து வந்தேன். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த என்னை பகடைக்காயாக வைத்து, எம்.எல்.ஏ., வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
எம்.எல்.ஏ., வில்வநாதன் கூறுகையில், ''ஊராட்சி தலைவராக இருந்த காலம் முதல், இப்போது வரை, யாரிடமும் ஜாதி பார்த்து பழகியது கிடையாது. என் வளர்ச்சி பிடிக்காத யாரோ சிலர், பிரச்னையை பெரிதுபடுத்த பார்க்கின்றனர்,'' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement