பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தானில் உருவாகிறது உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உருவாக உள்ளது.



latest tamil news



இது குறித்து ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மகேந்திர சர்மா கூறி இருப்பதாவது: மாநில தலைநகர் ஜெய்ப்பூர்-டில்லி சாலையில் சோன்ப் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் அமைய உள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் கட்டுமானப்பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதனாத்தில்
75 ஆயிரம் பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.


இந்தமைதானம் இரண்டு கட்டங்களாக கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 45 ஆயிரம் இருக்கைகள் கொண்ட பகுதியாகவும், இரண்டாவது கட்டமாக 30 ஆயிரம் இருக்கைககள் கொண்ட பகுதியாகவும் அமைக்கப்பட உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி கட்டடங்கள் அமைக்கப்படும்.


latest tamil news



ரஞ்சி கோப்பை போட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடிய இரண்டு பயிற்சி மைதானங்கள் மற்றும் இரண்டு உணவகங்கள்,வீரர்களுக்கான 30 பயிற்சிவலைகள் , 250 பேர் அமரக்கூடிய பத்திரிகையாளர்கள் சந்திப்பு அறை, 4 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளிட்டவை இடம் பெறும் என கூறினார்.

மேலும் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா மைதானத்தில் 1.10 லட்சம் பேரும் , ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1.02 லட்சம் பேரும் அமர கூடிய வகையில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து உலகின் 3 வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஜெய்ப்பூர் மைதானம் உருவாகும் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
06-ஜூலை-202010:18:48 IST Report Abuse
konanki இந்தியாவில் யாரும் பசியால் செத்து ஓழிவதில்லை. சிங்கப்பூரில் கார்ப்பரேட் டே இல்லையா?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-ஜூலை-202006:07:16 IST Report Abuse
Mani . V மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் செத்தொழிந்தாலும், கார்ப்பரேட்டுகள் லாபம் பெரும் அனைத்து திட்டங்களும் மிகச் சிறப்பாகவே நடைபெறுகிறது.
Rate this:
06-ஜூலை-202006:30:50 IST Report Abuse
chandran, pudhucherry இது எல்லா நாடுகளிலும் உள்ள ஒன்று. நீ அங்க பிச்சை எடுக்கிறியா என்ன. எல்லா நாடுகளிலும் பிச்சைக்காரன் இருக்கத்தான் செய்யறாங்க...
Rate this:
Maharajan - Bangalore,இந்தியா
06-ஜூலை-202010:20:50 IST Report Abuse
Maharajanஎல்லா நாடுகளிலும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்..ஆனால் இந்தியாவைப் போல் தெருவுக்கு 100 பிச்சைக்காரர்கள் இல்லை.. முட்டு கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு...
Rate this:
Cancel
06-ஜூலை-202006:05:27 IST Report Abuse
ஆனந்தன் ரொம்ப அவசியம்...!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X