சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

இஸ்லாமாபாத்; 'சீனாவிடம் இருந்து ஒதுங்கியிருந்தால், உலக நாடுகளின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.



latest tamil news



இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இதில், சீனா மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதற்கு, பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.'கொரோனா' வைரஸ் பரவல் விவகாரத்தில், ஏற்கனவே சீனா மீது பல நாடுகள் அதிருப்தியில் உள்ளன.தற்போது வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையில் சீனா இறங்கியுள்ளதற்கு, பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. மக்கள் அதிருப்திஇது குறித்து, பாகிஸ்தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சீனாவுடன், பாகிஸ்தான் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டுள்ளது. தற்போது, இந்தியா - சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னையில், சீனாவுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் கருத்து தெரிவித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தற்போது இந்தியா உடனான மோதலில், சீனாவுக்கு பல உலக நாடுகள், கண்டனம் தெரிவித்துள்ளன. சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.சமீபத்தில், பாகிஸ்தான் விமானங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. சீனாவுடனான நட்பே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

அதனால், சீனாவுடனான உறவு குறித்த கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதைத் தவிர, சீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில், சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல், சீனாவில் இருந்தே ஆட்களை அழைத்து வந்துள்ளது.இது, பலுாசிஸ்தான், கில்ஜித் பலூசிஸ்தான் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news



மேலும், சிறுபான்மையினரான உல்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா செயல்பட்டு வருகிறது. இதுவும் மத ரீதியில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்தியாவில் எல்லையை ஆக்கிரமிக்க முயலும் சீனா, நாளை பாகிஸ்தானிலும் இதே போல செயல்படும் அபாயம் உள்ளது. அதனால், சீன உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சீனாவுடன் சேர்த்து, நம்மையும் தனிமைப்படுத்திவிடுவர் என, இம்ரான் கானுக்கு, வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-202004:53:27 IST Report Abuse
J.V. Iyer பயங்கரவாதிகளின் பிறப்பிடம் பாகிஸ்தான் அல்லவா? உண்மையை உணர்ந்து தீர்வு காணுங்கள். தலைவலி மருந்தை தேய்த்தால் கான்சர் குணமாகாது. முதலில் தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படையுங்கள். தீவிரவாதிகளை நிர்மூலமாக்குங்கள். அவர்களுக்கு உதவி செய்யதீர்கள். அவர்களை தூண்டாதீர்கள். இதையெல்லாம் செஞ்சு பாருங்கள். உண்மை எப்போதும் கசக்கும்தானே?
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஜூலை-202014:00:31 IST Report Abuse
மலரின் மகள் உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய் என்று இரண்டும் கெட்டுப்போகட்டும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஜூலை-202014:00:20 IST Report Abuse
S. Narayanan நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார். வரவேற்கிறோம். நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X