பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (20) | |
Advertisement
பீஜிங்: பூடானுடன் எல்லைப் பிரச்னை உள்ளதாக, சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.லடாக் எல்லையில், சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நாடுகள், இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு பகிரங்கமாக ஆதரவும் தெரிவித்துள்ளன. இந்தியா மட்டுமின்றி, அண்டை நாடுகள் அனைத்துடனும், சீனாவுக்கு எல்லை உட்பட

பீஜிங்: பூடானுடன் எல்லைப் பிரச்னை உள்ளதாக, சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.latest tamil newsலடாக் எல்லையில், சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நாடுகள், இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு பகிரங்கமாக ஆதரவும் தெரிவித்துள்ளன. இந்தியா மட்டுமின்றி, அண்டை நாடுகள் அனைத்துடனும், சீனாவுக்கு எல்லை உட்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, பூடானை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பூடானுடன் எல்லை பிரச்னை உள்ளதாக, சீனா முதல்முறையாக தெரிவித்துள்ளது.


latest tamil news


இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா - பூடான் இடையேயான எல்லை, இதுவரை, சரியாக வரையறுக்கப்படவில்லை. அதனால். பூடானுடன் எல்லை பிரச்னை,நீண்டகாலமாக உள்ளது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 1984 முதல், 2016ம் ஆண்டு வரை, 24 முறை, சீனாவும், பூடானும் பேச்சு நடத்தியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டங்களை, சீனா வைத்துள்ளது. இந்த பிரச்னையில், மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை; சீனாவை குற்றம்சாட்டவும் உரிமையில்லை. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-202004:47:47 IST Report Abuse
J.V. Iyer மூன்றாவது, நான்காவது நாடுகள் தலையிட்டால் தான் இந்த சிறிய பூடான் நாட்டிற்கு அமைதி வரும், நீதி கிடைக்கும்.. இந்த குரங்கு எல்லா நாடுகளிலும் அதிரசத்தை பங்குபோட துடிக்கிறது.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
06-ஜூலை-202015:45:21 IST Report Abuse
vnatarajan இந்திய கம்யூனிஸ்ட்டுகள் சீனாவின் நடவடிக்கைகளைப்பற்றி வாய் திரப்பதில்லையே .அது ஏன் . .
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
07-ஜூலை-202018:47:07 IST Report Abuse
madhavan rajanwhen they do not get money from alliance partners like DMK, only China communist party will be funding their naxalite activities to cause disturbance in our country. Only when opportunity comes to criticize BJP they will comment vehemently. Otherwise, they will sleep over any matter as if nothing has happened....
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஜூலை-202013:45:56 IST Report Abuse
மலரின் மகள் சீனாவிற்கு என்று தனியாக எல்லை என்று இருப்பதால் தான் எங்கும் பிரச்சினை இருக்கிறது. எல்லை என்ற ஒன்றே இல்லாமல் செய்து விடவேண்டும் அவர்களை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X