மோடியின் லடாக் ரகசிய 'விசிட்'டுக்கு இரு காரணங்கள்!

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் முனையாக கருதப்படும் லடாக் செல்கிறார் என, இரண்டு நாட்களாக செய்தி வந்து கொண்டிருந்தது. திடீரென, பிரதமர் மோடி, லடாக் சென்று இறங்கிய செய்தி, இந்தியாவை மட்டுமின்றி சீனாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.மோடியின், லடாக், 'விசிட்' ஏற்பாடுகள். படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை காலை, 6:30 மணிக்கு, வீட்டிலிருந்து

புதுடில்லி: ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் முனையாக கருதப்படும் லடாக் செல்கிறார் என, இரண்டு நாட்களாக செய்தி வந்து கொண்டிருந்தது. திடீரென, பிரதமர் மோடி, லடாக் சென்று இறங்கிய செய்தி, இந்தியாவை மட்டுமின்றி சீனாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.latest tamil newsமோடியின், லடாக், 'விசிட்' ஏற்பாடுகள். படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை காலை, 6:30 மணிக்கு, வீட்டிலிருந்து கிளம்பினார் மோடி. வழக்கமாக பிரதமர் கார் சென்றால், அவர் செல்லும் பாதை முழுக்க முடக்கப்படும். மற்ற எந்த வாகனமும் செல்ல முடியாது. ஆனால், அன்று அப்படிப்பட்ட முறை கடைப்பிடிக்கப்படவில்லை. பிரதமரின் விமான பைலட்டிற்கு கூட, எங்கே போகப் போகிறோம் என்பது முதலில் தெரிவிக்கப்படவில்லையாம். அவர் விமானத்தில் அமர்ந்த பின், பிரதமர் வருவதற்கு சிறிது நேரம் முன், செல்லும் இடம் பற்றி சொல்லப்பட்டதாம்.


latest tamil news


லடாக்கில், நிமு என்ற இடத்திற்கு சென்றார் மோடி. இது தரை மட்டத்திலிருந்து, 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இளைஞர்கள் கூட, சில மணி நேரம் பயிற்சி மேற்கொண்ட பிறகு தான், இங்கு வருவராம். ஆனால், 69 வயது மோடி, எந்த பிரச்னையும் இல்லாமல், அங்குள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் வீராவேசமாக உரையாற்றி உள்ளார்.


latest tamil news


மோடியின் இந்த அதிரடி பயணத்திற்கு, டில்லி அரசியல்வாதிகள், இரண்டு காரணங்கள் சொல்கின்றனர். ஒன்று-, 'நம் எல்லைப் பகுதியை சீனாவிற்கு தாரை வார்த்து விட்டார் மோடி' என, எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது. மற்றொன்று, சீனாவிற்கு எச்சரிக்கை விடுப்பது.


latest tamil news


சீனாவுடன் நடந்த தாக்குதலில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள், பீஹார் ரெஜிமென்டைச் சார்ந்தவர்கள். அக்டோபர் மாத இறுதியில், பீஹார் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, இப்போது நிதிஷ்குமார் கட்சியும், பா.ஜ.,வும், கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. 'எனவே, தேர்தலை மனதில் வைத்து தான், இப்படி செய்துள்ளார், மோடி' என்கின்றனர், எதிர்க்கட்சி விமர்சகர்கள்.

'நாட்டிற்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பவர், பிரதமர் மோடி. அப்படிப்பட்ட அவருடைய நடவடிக்கைகளுக்கு, தேர்தலை காரணம் காட்டுவது முட்டாள்தனம்' என்கின்றனர், பா.ஜ., கட்சியினர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lt Col M Sundaram (Retd) - Thoothukudi 628 008 ,இந்தியா
12-ஜூலை-202013:08:35 IST Report Abuse
Lt Col M Sundaram (Retd) Full moon may also be one of the reason
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜூலை-202021:56:30 IST Report Abuse
Tamilan காரணம் எதுவாயினும் நல்ல நடவடிக்கைதான் . ஆதாயம் இல்லாமல் யாரும் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் .
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஜூலை-202015:10:13 IST Report Abuse
தமிழவேல் பாதிக்கப்பட்ட நாம், பலிகொடுத்த நாம் என்ற நிலையில் பிரதமர் நேரடியாக, பகிரங்கமாக சீனாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X