பொது செய்தி

தமிழ்நாடு

உயிரிழந்த மயிலுக்கு தேசியக்கொடி: போலீசுக்கு கமிஷனர் எச்சரிக்கை

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
peacock, coimbatore news, coimbatore, tamil nadu news, மயில், தேசியக்கோடி, கோவை, போலீஸ் கமிஷனர், சுமித் சரண்,

கோவை: கோவையில் உயிரிழந்த மயிலுக்கு தேசியக் கொடி போர்த்திய விவகாரத்தில் போலீசாரை கமிஷனர் எச்சரிக்கை செய்தார்.

கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் சிக்கி, பெண் மயில் உயிரிழந்தது. இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு சென்ற போலீஸ் ஒருவர், தன்னார்வலர்களுடன் இணைந்து உயிரிழந்த மயிலை மீட்டு, ரோட்டில் வைத்து அதன் மீது தேசியக் கொடியை போர்த்தி, அஞ்சலி செலுத்தினார்.பின், மயிலின் சடலத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

'நாட்டின் தேசியப் பறவை என்றாலும் உயிரிழந்த மயிலுக்கு தேசியக் கொடியை போர்த்தியது தவறு. அதையும் மீறி போர்த்துவது என்றால், முறையாக சடலம் வைக்கப்பட்ட பெட்டியின் மீது தான் போர்த்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, சாலையில் மயிலின் சடலத்தை வைத்து தேசியக் கொடியை போர்த்தியதும், பின்னர் கொடியோடு உடலை சுற்றி சாக்குப்பையில் போட்டு வனத்துறையிடம் ஒப்படைத்ததும் விதிமீறல்' என, சர்ச்சை எழுந்தது.


latest tamil news


இந்நிலையில், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் சம்மந்தப்பட்ட போலீசாரை எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
06-ஜூலை-202016:54:37 IST Report Abuse
Chowkidar Modikumar தேசப்பற்று மிக்க காவலரை மனிதாபிமானத்துடன் மன்னித்த மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் அவர்கட்கு நன்றி. ஜைஹிந்த்
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூலை-202016:27:15 IST Report Abuse
rajesh ரொம்பவே உணர்ச்சிவசப்படுதல் உடம்புக்கு ஆகாது.... முதலில் பொதுமக்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் பிறகு இறந்து போன மயிலுக்கு ரோட்டில் தேசியக்கொடியை போர்த்தி மரியாதை செய்யலாம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-ஜூலை-202015:59:59 IST Report Abuse
Bhaskaran இதையே வடநாட்டில் செய்துள்ளார்கள் வாட்சப்பில் வந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X