பொது செய்தி

தமிழ்நாடு

'யு டியூப்'பில் இலவச பாடம்: அசத்தும் கல்லுாரி பேராசிரியை

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
coimbatore news, online learning, e learning, youtube, யு டியூப், இலவச பாடம்,கல்லுாரி பேராசிரியை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள்.

கோவை : பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசு கல்லூரி பேராசிரியை, 'யு டியூப்' சேனலில் பாடங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாவரவியல் துறை பேராசிரியை தீபா. இவர், அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில், பல தலைப்புகளில் பாடங்களை வீடியோ பதிவு செய்து, யு டியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

பேராசிரியை தீபா கூறியதாவது: ஊரடங்கு துவங்கிய நேரத்தில், என் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் ஒரு பாடத்தை, 'வீடியோ' பதிவு செய்து, 'வாட்ஸ் - ஆப் ' குழுவில் அனுப்பி வந்தேன். மாணவர்கள் இந்த வீடியோவை, பிற மாணவர்களுக்கும் அனுப்பினர். பலரும், வீடியோ பாடங்கள் உபயோகமாக இருப்பதாக கூறினர்.இதையடுத்து, தனியாக யு டியூப் சேனல் துவங்கி, உயிரியல், தாவரவியல் மட்டுமின்றி அனைத்து அறிவியல் பாடங்கள் குறித்தும், வீடியோ பதிவேற்றம் செய்கிறேன். கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 'நீட்', சி.எஸ். ஐ.ஆர்., தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இலவசமாக வீடியோ பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. கட்டணம் செலுத்தி, பயிற்சிக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு, இலவசமாக பாடம் சொல்லி கொடுக்கும் நோக்கில் செய்து வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news



இவரது வீடியோ பாடங்களை பார்க்க, https://www.youtube.com/channel/UCXqGlEjNmKrTmWVqMIngbDA அல்லது டாக்டர் தீபா பார்த்தசாரதி என்ற யு டியூப்பில் பார்க்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
07-ஜூலை-202008:02:12 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நல்லதொரு சேவை
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
06-ஜூலை-202015:37:29 IST Report Abuse
இந்தியன் kumar கல்வியை இலவசமாக கொடுப்பது பெரும் புண்ணியம் வாழ்த்துக்கள் சகோதிரி.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஜூலை-202014:19:09 IST Report Abuse
S. Narayanan நல்வாழ்த்துக்கள். ஆனால் எல்லோராலும் படிக்கமுடியுமா. செல்போன் கூட இல்லாதவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X