அரசியல் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
AIADMK, covid 19, coronavirus, coronavirus tamil nadu, chennai news, coronavirus outbreak, அதிமுக, முன்னாள்அமைச்சர், வளர்மதி, கொரோனா, உறுதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இத்தொற்றுக்கு எதிர்கட்சி, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் என அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், தி.மு.க., அ.தி.மு.க.,வை சேர்ந்த தலா 4 எம்.எல்.ஏ.,க்கள் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



நேற்று (ஜூலை 05) கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது அதிமுக.,வின் கலை இலக்கிய அணி செயலாளராகவும் உள்ள பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஜூலை-202008:59:05 IST Report Abuse
Sampath Kumar சபாஷ் கோர்னாவிற்கு தெரிந்து விட்டது மனுஷனுக்கு தெரியல
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-ஜூலை-202013:09:11 IST Report Abuse
Malick Raja இவர் அதிமுகவின் நடனமாடும் பல்கலைக்கழகம் .. இவரது பேச்சில் தமிழின் தொன்மை .. சொல்லவே முடியாது ..அந்தமாதிரி இருக்கும் அதிமுக தலைமைக்கு இவர் ரொம்ப நல்லவர் .. வெளியே சொன்னோமுன்னா வீடு போய்சேரமுடியாது . அவ்வலு மதிப்பு மக்களிடம் .. அடேங்கப்பா .. விட்டுதுடா ஆசை விளாம்பழத்து ஓட்டோடு ..
Rate this:
Cancel
Ram - PA,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-202022:50:53 IST Report Abuse
Ram சொர்ணா அக்காவுக்கு கொரோனா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X