பொது செய்தி

இந்தியா

இன்றைய பேச்சு, பேட்டி, அறிக்கை...!

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
politics, Coronavirus, covid 19, இன்றைய, பேச்சு, பேட்டி, அறிக்கை

நமது தமிழக அரசியல்வாதிகள் நாளொரு பேட்டி, பொழுதொரு அறிக்கை என தங்கள் அரசியல் பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பேட்டி, அறிக்கைக்குப் பின் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அதை போட்டு உடைப்பது தான் தினமலர் நாளிதழில் வெளிவரும் பேச்சு, பேட்டி, அறிக்கை பகுதி. இப்பகுதி தினமும் தினமலர் இணையதளத்திலும் வெளியிடப்படும். நக்கல், நையாண்டி, கிண்டல் என சுடச் சுட இருக்கும் இப்பகுதியை படியுங்கள்... ரசியுங்கள்!

"இந்த நேரத்தில் வீட்டை நடத்தவே படாதபாடு பட வேண்டி உள்ளது. பெரிய மாநிலத்தை நிர்வகிப்பது மிகவும் சிரமம்தான் என சொல்லத் தோன்றும் வகையில் தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி நிறைய...

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் பேட்டி:

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பும், கொரோனா நெருக்கடி காலத்திலும் இருக்கும் சூழல் குறித்து உலகம் அறிந்திருக்கும். அதேபோல் கொரோனாவுக்குப் பின் ஏற்படும், பெரிய மாற்றங்களையும் நாம் விரைவில் காண்போம். சமூக இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்றுவதால் மிகப் பெரிய மாற்றங்களை நாம் காண உள்ளோம்.

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சுகாதாரத்துறை அமைச்சர் ஆக, இப்போதே இலக்கு நிர்ணயித்து செயல்படுவது போல தெரிகிறதே...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மருத்துவ அணி துணைத் தலைவர், டாக்டர் சரவணன் அறிக்கை:


latest tamil news
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், அரசு தவறிவிட்டது. இதனால், மக்கள் தங்கள் தொழிலையும், உடல்நலத்தையும், உயிரையும் இழந்து தவிக்கின்றனர். தமிழகத்தில், கொரோனா ஆட்சி வென்றிருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சி தோல்வி அடைந்திருக்கிறது.

'உண்மை. இந்த நேரத்தில், வீட்டை நடத்தவே படாதபாடு பட வேண்டியுள்ளது. பெரிய மாநிலத்தை நிர்வகிப்பது மிகவும் சிரமம் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., துணைத் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை:

எப்படி, ஒரு குடும்பத் தலைவர், இந்த பொருளாதார சிக்கலில், குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்படுகிறாரோ அதே போல, இன்றைக்கு பல்வேறு பொருளாதார சிக்கலுக்கு இடையே, தவிக்கும் முதல்வர் இ.பி.எஸ்., பல வித திட்டங்களை அறிவித்து வருகிறார்; அது பாராட்டுவதற்குரியது.

'அரசு நிச்சயம் வழங்கும் என, முதல்வர் உறுதி அளித்து உள்ளார்...' என, சொல்லத் துாண்டும் வகையில், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் செல்வம் பேச்சு:

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட, 18 அரசு ஊழியர்கள் இறந்துள்ளனர். இறந்த அனைவருக்கும், அரசு, தாமதமின்றி நிவாரணம் வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்க வேண்டும். தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

'எண்ணற்ற மக்களின், 'தாக' சாந்தியை தீர்க்கும் ஊழியர்களுக்கு, இப்படியும் ஒரு தர்மசங்கடமா...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், டாஸ்மாக் பணியாளர் சங்க, ஏ.ஐ.டி.யு.சி., மதுரை மண்டல செயற்குழு உறுப்பினர் சாஸ்தா பேட்டி:

வருவாய் வேண்டும் என்பதற்காக, டாஸ்மாக் கடைகளை காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை செயல்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், 15 ஊழியர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விற்பனை நேரத்தை, காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை குறைக்க வேண்டும்.

'கல்லுாரி, பல்கலைக் கழகங்கள் மூடியுள்ள நேரத்தில், உங்களின் கோரிக்கை எடுபடுமா, ஏற்கப்படுமா...' என, சந்தேகம் கிளப்ப தோன்றும் வகையில், அனைத்து பல்கலை அலுவலர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலர் முத்துமணி பேட்டி:

அனைத்து பல்கலைகளுக்கும் பொதுச்சட்ட முறையை அமல்படுத்த வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப, ஒரே பணிநிலைகள் மற்றும் சம்பளம் விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுபோல, பல்கலை செனட் மற்றும் சிண்டிகேட்டில், பல்கலை அலுவலர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

'முதலீடு வந்தாச்சு, சரி... ஊரடங்கை எப்போது நீக்கி, தொழிற்சாலைகளை எளிதாக இயங்கச் செய்யப் போகிறார் முதல்வர்...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி:

தமிழக பொருளாதாரத்தை உயர்த்த, முதல்வர் இ.பி.எஸ்., அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து, 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, முதலீடுகளை பெற்றுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
06-ஜூலை-202019:50:35 IST Report Abuse
K.n. Dhasarathan வருவாய் துறை அமைச்சரே எங்கே முதலீடு ? யார் யார் என்ன துறை எவ்வளவு முதலீடு திட்டம் பட்டியலிட முடியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X