தரம் குறைந்த வென்டிலேட்டர் கொள்முதல்; ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (60)
Share
Advertisement
Rahul, Ventilators, PM Cares, PM CARES fund, Rahul Gandhi, ராகுல், வென்டிலேட்டர், தரம்குறைவு, குற்றச்சாட்டு

புதுடில்லி: பி.எம் கேர்ஸ் நிதியத்தின் வாயிலாக தரம் குறைந்த வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதாக காங்., எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

பிஎம் கேர்ஸ் நிதி மூலம், 'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து கொரோனா சிறப்பு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட உள்ளதாகவும், எஞ்சிய 20 ஆயிரத்தில் அக்வா ஹெல்த்கேர் 10 ஆயிரம், ஏஎம்டிஇசட் பேசிக் 5,650, ஏஎம்டி இசட் ஹை என்ட் 4000, அலைட் மெடிக்கல் 350 வென்டிலேட்டர்கள் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், அக்வா நிறுவனத்தின் மூலம் வாங்கப்படும் வெண்டிலேட்டர்கள் தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரது கருத்தின்படி, மென்பொருள்கள் மூலம் அந்த வெண்டிலேட்டர்களின் குறைபாடுகள் தெரியாமல் ஏமாற்றப்படுவதாக செய்திக்கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. இதனை காங்., எம்.பி ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‛பி.எம் கேர்ஸ் நிதியத்தின் திறமைகள்: 1) இந்திய மக்களின் உயிருக்கு ஆபத்து எற்படுத்துவது. 2) மக்களது பணம் தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு பயன்படுவதை உறுதி செய்வது,' என பதிவிட்டு, ‛கொரோனாவிற்கு எதிரான போரில் தோற்ற பாஜ,' என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
06-ஜூலை-202020:38:17 IST Report Abuse
Darmavan .பப்பு வாயும் அதுவே
Rate this:
Cancel
Vasu - mumbai,இந்தியா
06-ஜூலை-202020:10:28 IST Report Abuse
Vasu பப்பு. 26Nov மும்பை தாக்குதல் நியாபகம் இருக்க. மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் கர்கரே பெயர் நியாபகம் வருதா உனக்கு.......அப்பா டெல்லி-ல உங்க ஆட்சி...மகாராஷ்டிரா மாநிலத்திலயும் உங்க ஆட்சி.......ATS Chief Hemant கர்கரே - Karkare was killed due to defective bullet proof vest The bullet proof vests, worn by slain ATS Chief Hemant Karkare and two other senior officers while fighting terrorists on November 26 last, belonged to the batch of 110 defective pieces purchased by the police way back in 2002, a PIL, filed in Bombay High Court, has alleged.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
06-ஜூலை-202020:08:42 IST Report Abuse
Tamilnesan எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.. முதல் நான்கு ஐந்து வருடம் வாஜ்பாய் அரசாங்கம் கட்டியிருந்த அடித்தளத்தை பயன்படுத்தி, பெரும்பணக்காரர்களுக்கு சகட்டுமேனிக்கு கடனை அள்ளிக்கொடுத்து பொருளாதாரத்தை 8 - 9 சதவீதம் ஆக maintain செய்ததை தவிர்த்து, காங்கிரஸின் முந்தைய 10 ஆண்டு ஆட்சியின் சாதனைதான் என்ன? அந்த 4 -5 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சியும் சும்மா வரவில்லை.. சுமார் 36 லட்சம் கோடி கடனை பெரும்பணக்காரர்களுக்கு கொடுத்து, அது வராக்கடனாக மாறி, வங்கிகளை மொட்டை அடித்து அதன் பலனை இன்று வரை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் .. சரி.. வராக்கடன் கொடுத்ததுதான் கொடுத்தார்கள்.. விலைவாசியையாவது கட்டுப்பாட்டில் வைத்தார்களா? தொடர்ந்து inflation (பணவீக்கம்) 10 முதல் 12 % ஆக இருந்தது.. பாதுகாப்பு.. கேட்கவே வேண்டாம்.. நாளுக்கு ஒரு குண்டு வெடிப்பு.. ராணுவத்திற்கு அடிப்படை விஷயங்களை கூட செய்துகொடுக்கவில்லை..சொன்னால் வெட்க கேடு.. போர் வாந்தால் சுட துப்பாக்கி இருந்தது, ஆனால் போதுமான குண்டுகள் இல்லை.. ஊழல்கள் பற்றி கேட்கவே வேண்டாம்...இப்படி மகா கேவலகமாக நிர்வகித்துவிட்டு, எந்த தைரியத்தில் இன்று காங்கிரஸ் காரர்கள் ஏதோ தாங்கள் எல்லாம் பிரமாதமாக செய்ததை போல வெக்கமே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் வகையில் இந்த போராளிகள் நல்லா இருந்த நாட்டை நாசாமாக்கிவிட்டார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்? இந்தியாவில் உள்ள எந்த ஆறறிவுள்ள ஜீவனுக்கும் தெரியும் கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனை மோடி ஆட்சியில்தான் தீர்க்கப்பட்டிருக்கிறது என்று.. அது காவிரி ஆகட்டும், காஷ்மீர் ஆகட்டும்.. ஆனாலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்ஊழல்கள் கேட்கவே வேண்டாம்...ஊழல்கள் கேட்கவே வேண்டாம்...த திமுகவிடம் எச்ச காசு வாங்கித்தின்னும் ஊடகங்கள் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாகவே வைத்திருக்கிறார்களே.. தமிழர்களின் அந்த ஆறறிவு என்னவாயிற்று?
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
07-ஜூலை-202007:49:10 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஉங்க கருத்து சிந்திக்க வைக்குது சிந்திப்பது திராவிட சித்தாந்தத்துக்கு எதிராகும் நீங்க விலை போயிட்டீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X