பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மக்கள் ஓடத்துவங்கினர்; சாலைகளில் வாகனங்கள் வேகம்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
chennai news, chennai lockdown, coronavirus lockdown, lockdown extension, covid 19, சென்னை, கொரோனா, ஊரடங்கு, தளர்வு

சென்னை: சென்னையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இருந்த முழு ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில் , தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இயல்பு நிலை திரும்பி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில், தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 2 ஆயிரத்திற்கும் மேல் பதிவான பதிப்பு, ஒரிரு நாட்களாக அதற்கு கீழ் குறைவாக பதிவாகி வருகிறது. இதுவரை 68, 254 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 42,309 பேர் குணமடைந்தனர். 1,054 பேர் உயிரிழந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.


latest tamil news
தொடர்ந்து, சென்னைக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உணவகங்களில் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளும் (பார்சல் சேவை மட்டும் ) காலை 6: 00 மணி முதல் மாலை 6: 00 மணி வரை மட்டுமே செயல்படுகின்றன. அதேநேரத்தில், காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிமுறைகளுடன் காலை 10:00 மணி முதல் மாலை 6: 00 வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடனும், டாக்ஸிக்கள் மூன்று பயணிகளுடனும் இயங்குகின்றன. ஐ.டி., நிறுவனங்கள், ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் காரணமாக சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் கடைக்கு வந்துள்ளனர். திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தளர்வு காரணமாக, சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டன. ஒரு சில இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.


latest tamil news
28 பேர் பலி


சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்தனர்.


50 சதவீத ஊழியர்கள்


தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்றில், அரசு அலுவலகங்களில், சுழற்சி முறையில் 50 சதவீத பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி பெண் பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பணிக்கு வராத நாட்களும், பணி நாட்களாகவே எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வங்கிகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஜூலை-202019:33:11 IST Report Abuse
மலரின் மகள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தலையங்கம் வரவில்லை மலரில். தயவு செய்து மீண்டும் தலையங்கம் பகுதி சிறப்பு பெறட்டுமே. நாங்கள் தொடர்ந்து படிக்கும் பகுதியில் அதுவும் ஒன்று.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
06-ஜூலை-202018:02:11 IST Report Abuse
தமிழ்வேள் ஊரடங்கு மட்டுமே பயன்தராது ..பொது போக்குவரத்து தடையினால் தேவையற்ற வாகன பெருக்கம் அனைவருக்கும் அரசு வேலை கிடையாது . தனியாரில் வேலை செய்பவன் வேலைக்கு சென்றால் தான் சோறு ..எனவே பொது போக்குவரத்து பயன்படுத்தியவர் கூட இன்று டூ வீலர் மற்றும் கார் பயணம் ...வாகன நெரிசலுக்கு காரணம் அரசு ....பொது போக்குவரத்தை எத்தனை நாளைக்கு தடை செய்வீர்கள் ? ஆயுள் முழுவதும் கொரோனா இருக்கும் என்பதால் பொது போக்குவரத்தே இன்றி இருக்க இயலுமா ? அரசுக்குத்தோலை நோக்கு அறவே இல்லை ..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
06-ஜூலை-202017:49:21 IST Report Abuse
Visu Iyer சுதந்திர தினத்திற்கு முன் கொரானா போயிடும்.. அப்புறம் மீண்டும் வரும்... அவ்வளவு தான்.. ஏன்.. எப்படி என கேட்க கூடாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X