பொது செய்தி

தமிழ்நாடு

கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
coronavirus, covid 19, corona, coimbatore news, coimbatore, tamil nadu, கோவை, செல்வபுரம், கொரோனா, பொது மக்கள், கொடிசியா,

இந்த செய்தியை கேட்க

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உள்ளது. 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்த நிலையில் 1,510 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 275 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக கோவை, கொடிசியாவில் 400 படுக்கைகள் கொண்ட சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கொடிசியாவில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், கொரோனாவால் அச்சமடைந்து, அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூலை-202020:56:44 IST Report Abuse
ஆப்பு நிறைய பேரை பரிசோதனை செய்தால் நிறைய பாதிப்பு வரும். பரிசோதனையே செய்யலேன்னா யாருக்கும் தொற்று வராது.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
06-ஜூலை-202020:10:11 IST Report Abuse
siriyaar ஆனா செய்தியில மொத்தமா 60ன்னு வருது, அப்ப தமிழ்நாட்டில 10000 குகமேல உன்மையில் வருதான்னு தெரியல எபுபடியோ ஜனத்தொகை குறையப்போகுது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஜூலை-202015:50:18 IST Report Abuse
Vena Suna செல்வபுரம்.... அருமையான இடம்.. பேரூர் சிவன் கோவில் பக்கத்துல... மக்கள் எளிமையானவர்கள்.. நல்லவர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X