பொது செய்தி

இந்தியா

கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் பின் வாங்கியது?

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
galwan valley, galwan river, india, china, india china border, கல்வான் பள்ளத்தாக்கு, சீன ராணுவம், இந்தியா,  ராணுவம், வாபஸ், பிரதமர்

புதுடில்லி: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன ராணுவம் சுமார் ஒரு கி.மீ., தூரம் பின்வாங்கி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்களும், அங்கிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சீன வீரர்கள் கடுமையாக தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். சீன தரப்பில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 43 பேர் வரை இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட பதற்றத்தை குறைப்பதற்காக, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அப்போது, இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதற்றத்தை குறைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி, திடீரென லடாக் சென்று ஆய்வு செய்தார். அப்போது, வீரர்கள் மத்தியில் பேசிய அவர், தற்போது நாட்டின் வளர்ச்சிக்கான நேரம். எல்லை விரிவாக்கத்திற்கான காலம் முடிந்துவிட்டது எனக்கூறினார்.


latest tamil news


இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து ஒரு கி.மீ., தூரம் சீன படைகள் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கல்வான் நதி வளைவில் இருந்து அவர்கள் திரும்ப துவங்கியுள்ளதாகவும், கட்டமைப்புகளை அகற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவின்படி, சீன ராணுவம் 1 முதல 2 கி.மீ., தூரம் பின்வாங்கி சென்றுள்ளது. டென்ட்கள், வாகனங்களை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால், கனரக ஆயுதங்கள் கொண்ட வாகனம் தொடர்ந்து கல்வான் நதி பகுதியில் உள்ளது. அதனை இந்திய ராணுவம் கவனித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
08-ஜூலை-202010:54:19 IST Report Abuse
S.P. Barucha சரியான போர் திட்டமிடல் இந்தியாவிடம் இல்லை என்பதே உண்மை. சம்பந்தமே இல்லாமல் விடுதலை புலிகளிடம் போர் செய்து ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.இது மிக பெரிய போர் திட்டமிடல் தோல்வி ஆகும்.இந்தியாவிற்கு திறமையான பாதுகாப்பு ஆலோசகர் தேவை.இல்லையென்றால் இந்தியா மீண்டும் ஒரு போர் அவமானத்தை சந்திக்க நேரிடும்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
06-ஜூலை-202022:00:07 IST Report Abuse
Nallavan Nallavan சீனாவின் நோக்கம் இடம் பிடிப்பதாகக் கூட இருந்திருக்காது ........... அச்சுறுத்துவது மட்டுமே .................
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
06-ஜூலை-202020:33:12 IST Report Abuse
Darmavan எதுவும் தெளிவாக இல்லை. ஒன்று அல் 2 கிம் என்பது ஒரு ரோடு நீளம் இதில் பின் வாங்கி திரும்ப உடனே வரமாட்டான் என்பது என்ன நிச்சயம் .,நாம் கவனமாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X