அத்துமீறும் போராட்டக்காரர்கள்; கொதிக்கும் டிரம்ப்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Trump, Donald Trump, Columbus statue, USA protest, டிரம்ப், போராட்டம், கொலம்பஸ், சிலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து இனவெறிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அட்லாண்டாவில் ஒரு பிரமாண்ட வெள்ளை இனத்தவர் சிலை உள்ளது. வெள்ளையர்களின் ஆதிக்கத்தை உணர்த்தும் சிலை அது. இந்த சிலையை உடனடியாக நீக்க சவுத் மவுண்ட் பார்க் பகுதியில் கருப்பின போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil newsஇதுபோல அமெரிக்காவில் பல நகரங்களில் பல ஆண்டுகளாக பொது இடங்களின் அடையாளங்களாகத் திகழும் சிலைகளை நீக்க போராட்டக்காரர்கள் கோருகின்றனர். இது டிரம்ப் அரசை எரிச்சல் அடையச் செய்துள்ளது. அட்லாண்டா செய்தியைக் கேட்ட ட்ரம்ப் வழக்கம்போல் எரிச்சல் அடைந்தார். போராட்டக்காரர்கள் என்ற பெயரில் கொள்ளையர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் எச்சரித்தார்.


latest tamil news


இதேபோல சியாட்டில் மாகாணத்தின் மேற்கு பகுதியில் போராட்டக்காரர்கள் ஓட்டி வந்த கார் இடித்து ஒரு பெண் பலியானார். மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் போராட்டம் என்ற பெயரில் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பின சுதந்திரத்தில் ஈடுபடுவோர் என்ற போர்வையில் இவர்கள் வெள்ளையர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துகின்றனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சனியன்று அமெரிக்க சுதந்திர தின உரையில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சி இன வேறுபாட்டை களைந்து ஒற்றுமையான முன்னேறும் சமூகத்தை அடைய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் சுயலாபத்திற்காக போராட்டக்காரர்கள் என்ற பெயரில் இது போல அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
06-ஜூலை-202019:48:09 IST Report Abuse
Raj இது ஒரு டிரம்ப் தந்திரம் பேச்சு. இவரே பிரச்சினையே உண்டாக்குகிறார்
Rate this:
Cancel
06-ஜூலை-202019:04:13 IST Report Abuse
kulandhai Kannan எந்த நாட்டிலும், பெரும்பான்மையினர் பெருந்தன்மையுடனும், சிறுபான்மையினர் சூதானமாகவும் நடந்து கொண்டால், நல்லது.
Rate this:
Siva - Chennai,இந்தியா
06-ஜூலை-202021:27:57 IST Report Abuse
SivaExcept for India where minority rules. Politicians compete to please minority to get their vote.....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-ஜூலை-202017:25:28 IST Report Abuse
வெகுளி அடடே.. போராட்டக்காரர்களை அசிங்கப்படுத்திட்டாரே பெரியண்ணன்..... நம்மவூர் போராளீஸ் இனி உங்கள் NGO பணம் தேவையில்லையென்று பொங்குவார்களா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X