காற்றில் பரவும் நோய் கொரோனா ? ஆய்வாளர்கள் கடிதம்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
CoronaVirus, Airborne, WHO, உலக சுகாதார அமைப்பு, கொரோனா, வைரஸ், காற்று, பரவல்

ஜெனீவா: கொரோனா வைரசின் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் காற்றில் பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பதால் காற்றில் வைரஸ் பரவும் என அறிவிக்க கோரி உலக சுகாதார அமைப்புக்கு நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ், மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு எளிதாக தொற்றி விடுகிறது. ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும்போது கொரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. இதனை மாற்றி, காற்றில் கொரோனா வைரஸ் பரவும் என அறிவிக்க வேண்டும் என உலகில் உள்ள நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.


latest tamil news



காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையை 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் அடுத்த வாரம் வெளியிட உள்ளனர். அதற்கு முன்பாக உலக சுகாதார அமைப்புக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும், ஆய்வறிக்கையைக் குறிப்பிட்டும் பரிந்துரையை மாற்றக் கோரியுள்ளனர். ஆனால், இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் உலக சுகாதார அமைப்பு இதுவரை வெளியிடவில்லை.


latest tamil news



கொரோனா பாதித்த ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவரின் எச்சலின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் சுவாசிக்கும் போது, வைரசால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாக 'நியூயார்க் டைம்ஸ்' குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மருத்துவர் பெனிடெட்டா அலிகிரான்ஸி கூறுகையில், கொரோனா வைரஸ் நோய், காற்றில் பரவுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைக் கடந்த இரு மாதங்களாகக் கணித்து வருகிறோம். ஆனால், அதற்கான உறுதியான, நிலையான ஆதாரங்கள் இல்லாததால் அதை வெளியிடவில்லை,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஜூலை-202021:11:47 IST Report Abuse
S. Narayanan தேவையில்லாமல் மக்களை பயமுறுத்த வேண்டாம்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
06-ஜூலை-202019:21:00 IST Report Abuse
A.George Alphonse இதுபோன்ற செய்திகள் மக்களை பீதியடைய செய்யுமே தவிர,மன தைரியத்தையும், உறுதி மனப்பான்மையையும் ஒருபோதும் ஏற்படுத்தாது.இது என்ன இறைவனின் தெய்வீக கதிர் வீச்சலா அல்லது உயிரோட காற்றிலே மிதக்கும் ஒளி, ஒலிகதிரா?மக்களிடம் உடும்புபோல்பிடித்து ஒட்டி கொள்ள.வீணான இதுபோன்ற விஷயங்களை படித்து மக்கள் பீதியும்,மரண பயமும் அடையாமல் "என்னதான் நடக்கும் நடக்கட்டும்" என்று மனஉறுதியோடு அரசு கூறும் வழிமுறைகளை ஒழுங்காக கடைபிடித்தால் இந்த காத்து கருப்பு காரோண நம்மை ஒருபோதும் சீண்டாது,அணுகாது,அண்டாது.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
06-ஜூலை-202019:15:34 IST Report Abuse
ocean kadappa india 24 மணி நேரமும் முக கவசம் எவரும் அணிவதில்லை. வீட்டினுள் முக கவசம் மாட்டாத நேரங்களில் மூக்கில் நெடி வருகிறது.. கொஞ்ச நாட்களாக மூக்கில் அடிக்கடி நெடி ஏறி தும்மல் வருகிறது. ஆர்ம்ப காலத்தில் தொற்றிய குரோனா அதை விட்டு சமீப காலமாக நேராக மனிதர்களின் மூக்கினுள் பாய்கிறது. பாயும் வேகத்தில் நெடியை கிளப்புகிறது. . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X