பொது செய்தி

தமிழ்நாடு

15 கலெக்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
tamil nadu, tamil news, tn news, கொரோனா,  கலெக்டர்கள், தலைமை செயலர், சண்முகம்,

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 15 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மதுரை , திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ராமநாதபுரம், சேலம், விருதுநகர், திருச்சி, ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி,தேனி உள்ளிட்ட 15 மாவட்ட கலெக்டர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் துரிதப்படுத்துவது, மண்டலங்கள் இடையிலான போக்குவரத்து, மற்றும், ஊரடங்கில் தளர்வுகள், கட்டுப்பாடுகள், ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டன.

சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த ஆலோசனை நடந்தது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-202021:21:22 IST Report Abuse
தல புராணம் சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலை ன்னு சொல்றாரு. நிலைமை அப்படியா இருக்கு? சென்னையை தாண்டி மற்ற "மாவட்டங்களிலும் " கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலை என்பது தான் சரி.. இப்பவும் சென்னை இந்திய நகரங்களில் இரண்டாமிடத்தில் இருக்கு.. (மற்ற வடமாநில நகரங்களில் நம்மை விட அதிகம் பொய் சொல்கிறார்கள் அது இன்னொரு பிரச்சினை)
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஜூலை-202018:53:58 IST Report Abuse
மலரின் மகள் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். வெறுமனே தகவலை மட்டுமே வெப்சைட் மூலம் பெற்று கொண்டு அதன் பிறகு யாதொரு பேச்சும் இல்லையே? கேரளாவை பாருங்கள் எத்துணை சிறப்பாக செய்கிறார்கள். கைகழுவுங்கள் என்று சொல்லவிட்டு கைகழுவிவிட்டீர்கள் பாவம் நமது தொழிலார்கள் அங்கே குடிபும்பத்தினர் இங்கே என்று அல்லல்படுகிறார்கள். இப்போது விளம்பரத்தில் அறிக்கையில் முகக்கவசம் மட்டுமே இருக்கிறது. ஊரடங்கு வருவதும் போவதுமாக இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் மந்திரி பிரதானிகள் ஒதுங்கி விட்டார்கள் என்று தெரிகிறது. அதிகாரிகளாகிய நீங்கள் உண்மையாக உழைத்தல் அர்பணிப்புணர்வுடன் பணியாற்றினால் அடுத்துவ யாரும் தேர்தலுக்கு முந்தைய குடியரசு தலைவரின் ஆட்சியில் மாநில கவர்னரின் ஆலோசகராக பணியில் சிறப்பற்றலாம் தமிழகத்தை அலெக்ஸ்சாண்டர் காலம் போல சில காலம் மேம்படுத்தி தரலாம். முயலுங்கள். சிறப்புக்கள்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-202021:24:08 IST Report Abuse
தல புராணம்// வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்.? // - ம்ம்ம் வண்டி வண்டியா வச்சிருக்கோம்.. பொய்யைத் தான் .. வந்து அள்ளிட்டு போங்க.....
Rate this:
Cancel
06-ஜூலை-202017:30:28 IST Report Abuse
K. R. RAMAKRISHNAN சுடலை சொல்லும் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. ஏனெனில் இடைஞ்சல் இல்லாமல் நடப்பதற்கு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X