துபாய்க்கு இறுதி வணக்கம் வைக்கும் குடியேறிகள்; உதவும் புகைப்படக் கலைஞர்| Photographer captures expats who lost jobs during pandemic | Dinamalar

துபாய்க்கு இறுதி வணக்கம் வைக்கும் குடியேறிகள்; உதவும் புகைப்படக் கலைஞர்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (12)
Share
Goodbye Dubai, coronavirus Pandemic, covid 19, துபாய், போட்டோகிராபர், இறுதி வணக்கம்

துபாய்: லூயிசா சுமங்கி என்ற துபாய் சுற்றுலாத்துறையில் வேலை பார்த்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வேலை பறிபோய் விட்டது. 12 வருடங்களாக குடும்பத்துடன் துபாயில் வசித்து வந்தவர் லூயிசா. தற்போது தன் சொந்த ஊரான ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளார். இறுதியாக துபாய் நினைவாக குடும்பத்துடன் துபாயின் முக்கிய இடங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

பவுலா ஹைனே என்ற துபாய் புகைப்படக் கலை நிபுணர் இதுபோல கொரோனா வைரஸை முன்னிட்டு துபாயைவிட்டு சொந்த நாட்டுக்குச் செல்லும் குடிமக்களுக்கு இலவசமாக புகைப்படங்களை எடுத்துத் தருகிறார். குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகள் வரை பணி நிமித்தமாக சொந்த நாடுகளை விட்டு துபாய்க்கு வந்து தங்கி இருப்பவர்கள் மிகுந்த மன பாரத்துடன் கொரோனா வைரஸ் காரணமாக வேலை இழந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.


latest tamil news


இவர்களுக்கு அவர்கள் விரும்பியபடியே குடும்பத்துடன் இலவசமாக புகைப்படம் எடுத்துக் கொடுக்கிறார் இந்த புகைப்பட கலை நிபுணர். இதை ஒரு சமூக சேவையாக கருதி செய்துவருகிறார். இவரது இந்த சேவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. துபாயில் திருமணங்கள் உள்ளிட்ட விசேஷங்கள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இவர் தொழில் மந்தமாக உள்ள நிலையிலும் இந்த சேவையை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

செல்வம் கொழிக்கும் நகரமாகத் திகழும் துபாயில் ஐந்து வருடங்கள் காண்ட்ராக்டில் பணிபுரிந்தாலே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவுடன் உலகின் பல மூலைகளில் இருந்து துபாய்க்கு பலர் வேலைக்கு வருகின்றனர். இவர்களது கனவு தற்போது கொரோனாவால் சுக்குநூறாகி வருவது சோகமான விஷயம். துபாய் காலாகாலமாக குடியேறிகளின் நகரமாக விளங்குகிறது.


latest tamil news


பல்வேறு நாட்டு மக்கள் அவர்களது கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இங்கு வெளிப்படுத்துகின்றனர். துபாயில் உள்ளன துபாய் பீச் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த கடற்கரையின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் ஆர்வம் காட்டுவர். தற்போது கொரோனா காரணமாக சொந்த நாடுகளுக்கு செல்பவர்களும் இந்த கடற்கரையின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டு துபாய்க்கு இறுதி வணக்கம் வைத்து செல்ல ஆவலாக உள்ளனர்.

தங்களுக்கு வாழ்வளித்த இந்த நகரத்தை கடைசியாக கண்டு இவர்கள் தங்கள் நாடுகளுக்கு கண்ணீருடன் செல்கின்றனர். கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கை மற்றும் எதிர்காலத் திட்டங்கள், கனவு, இலட்சியம் உள்ளிட்டவற்றை மாற்றி அமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X