பொது செய்தி

இந்தியா

'முழு ஊரடங்கு வராது... பெங்களூருவை விட்டுப் போகாதீங்க': அமைச்சர் வேண்டுகோள்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

பெங்களூரு: இந்தியாவில் மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரிய நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் உச்சமடைந்து வருகிறது. ஆனால் இந்த வரிசையில் பெங்களூரு நகர் மட்டும் தப்பிப் பிழைத்து, கொரோனா கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. முன்னதாக நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கில் பதிவான தொற்று பாதிப்பு, தற்போது ஆயிரக்கணக்கில் பதிவாகத் துவங்கியுள்ளது.latest tamil news
இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 4ம் தேதி இரவு 8:00 மணி முதல் (இன்று) காலை 5:00 மணி வரை முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர, வேறு எதற்கும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. சாலையில் வாகனங்கள் இயங்க முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 4ம் தேதி, பெங்களூருவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் சொந்த ஊர்களை நோக்கிப் பயணித்தனர். அதேபோல் இன்று காலை முதல் தங்களது சொந்த ஊர்களை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கத் துவங்கியுள்ளனர்.


latest tamil newsகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், 'இன்னொரு முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்ற பயத்தினால் பெங்களூருவில் வசிக்கும் நிறைய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முயல்கின்றனர். 'இங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது' என, முதல்வர் ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டார். எனவே மக்கள் யாரும் பெங்களூருவை விட்டு வெளியில் செல்ல வேண்டாம். இந்த நேரத்தில் நீங்கள் இடம் பெயர்வது மாநிலத்தின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும். மக்கள் அனைவரும் தற்போது இருக்கிற அதே இடத்திலேயே இருக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

'முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், வேலை கிடைக்காது, வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கருதும் பல்லாயிரம் பேர், பெங்களூருவை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர். இவர்களால் கொரோனாவும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது' என, கர்நாடக சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
06-ஜூலை-202021:08:42 IST Report Abuse
Sundararaman Iyer it is impossible to live in Bangalore without any income. It is better to relocate to any other city or village in India than to die slowly in Bangalore ..............
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
06-ஜூலை-202021:07:06 IST Report Abuse
S. Narayanan கடவுளே. கொரோனா முடிந்தால் கொஞ்சநாள் பெங்களூரு செல்லலாம் என்று நினைத்தோம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஜூலை-202018:33:23 IST Report Abuse
மலரின் மகள் அவரவர்கள் தாய் நிலத்தை நோக்கி சென்று அங்கு அமைதியாக பல மாதங்கள் கழித்து விட்டு அங்கேயே கூட ஏதேனும் தொழில் செய்து வாழமுடிந்தால் அதை முயல்வது உத்தமம். வேறு மாநிலங்களில் அதுவும் வேற்று மொழி மாநிலங்களில் தவிப்பது மிகவும் கொடுமையானது. பெங்களூரு போன்ற பெரிய மாநகரங்களில் நல்ல வருமானத்துடன் வேலை உத்திரவாதம் இருந்தால் மட்டும் தான் வாழ முடியும். வருமானம் போனபிறகு அங்கு அதுவும் இதுபோன்ற தடைகாலங்களில் விலைவாசி ஏறிவிடும் நேரத்தில் சமாளிப்பது மிகப்பெரிய தவறாக முடியும் என்று தெரிந்து கொள்ளலாம். அமைச்சர்கள் சொல்வார்கள் என்று அதை நம்பி இருந்துவிட்டால் பின்னாளில் இவர்கள் மாற மாட்டார்கள் என்று என்ன நிச்சயம். எத்துணையோ பேர் தவிக்கிறார்கள். அரசும் அதிகாரிகளுக்கும் பிரச்சினை இல்லை என்பதால் அவர்கள் வாழ்க்கையின் இந்த கட்டம் சற்று வித்தியாசமானதாக இருக்குமே தவிர கடினப்பக்கமாக இராது என நம்பலாம். சாமானியர்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது. குவைத் போன்ற தேசங்களில் நமது மக்களுக்கு வேலை பாதிப்பு வரும்போது தூதரகம் மூலம் அவர்களிடம் பேசி வாங்கும் எரிபொருள் இறக்குமதிக்கு தக்க அளவில் அங்கு நமது கூலி தொழிலார்களுக்கு வேலை உத்திரவாதம் தாருங்கள் என்றும், திடுமென்று அனுப்பாமல் ஒரு வருட கால அவகாசம் தர முயற்சிக்க சொல்லி அழுத்தம் தரலாம். அனால் அப்படியெல்லாம் யார் நமக்கு உதவுவார்கள். அதனால் தான் வந்தோம் சிறிது காலம் உழைத்தோம் இன்று உழைக்குமிடத்தில் வாழ்வாதாரம் பாதிப்பு யாரையும் குறை சொல்ல முடியாத நிலை. திரும்பி சென்று வேறு மாநிலம் வேறு ஊர் என்று சென்று விடுவது வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்வது சரியாக இருக்கும் போல தெரிகிறது. சாமானியர்கள் படும் பாட்டிற்கு கருத்துக்களை எழுதுவதற்கு கூட ஆட்கள் பஞ்சம் இப்போதெல்லாம். குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்ககூடாது, கொடுத்தால் பலர் எதிர்ப்பு தெரிவிக்க வந்து விடுவார்கள். நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள் அதற்கு காரணம் அவசர கதியில் கொணரப்பட்ட ஊரடங்கு தான். ஹீரோ சூப்பர் ஹீரோ வாக முயன்றதன் விளைவை நாம் சந்திக்கிறோம் என்று தான் எண்ண வேண்டி வருகிறது நிலைமை. பாவமாகவும் பரிதாபமாகவும் தான் இருக்கிறோம் நாம். அரசின் உடனடி கருணையும் தேவியின் கடைக்கண் பார்வையும் நமக்கு கிடைக்கவில்லைஏ.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-202021:01:25 IST Report Abuse
தல புராணம்// சாமானியர்கள் படும் பாட்டிற்கு கருத்துக்களை எழுதுவதற்கு கூட ஆட்கள் பஞ்சம் // என்ன திடீர் ஞானோதயம் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X