பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆகவும், பலி 1,571 ஆகவும் உயர்வு

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 06) புதிதாக 3,827 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆகவும், பலி எண்ணிக்கை 1,571 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 3,783 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 44 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 95 ஆய்வகங்கள் (அரசு-49 மற்றும் தனியார் 46) மூலமாக, இன்று மட்டும் 34,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 13 லட்சத்து 76 ஆயிரத்து 497 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news


இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,285 பேர் ஆண்கள், 1,542 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 70,370 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 44,586 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 3,793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 571 ஆக உள்ளது.


வயது வாரியாக பாதிப்பு

இன்று மட்டும் கொரோனா பாதித்த 61 பேர் உயிரிழந்தனர். அதில், 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,571 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,833 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,668 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 95 ஆயிரத்து 390 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13 ஆயிரத்து 920 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூலை-202019:00:43 IST Report Abuse
ஆப்பு சமூக பரவல் இல்லாத போதே இப்பிடி....
Rate this:
Cancel
Selliah Sivasubramaniam - jaffna,இலங்கை
07-ஜூலை-202010:09:36 IST Report Abuse
Selliah Sivasubramaniam தமிழ் நாட்டில் கட்டுப்படுத்துவது கடினம். ஏன் என்றால் எதிர் கட்சிகள் அரசியல் லாபம் பார்க்கின்றன. ஊடகங்கள் வியாபாரம் பண்ணுகின்றன. அரசில் குறை காண்பது ஒன்றே இவர்களின் நோக்கம். பரவல் ஆரம்பத்தில் மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. மாறாக சாப்பாடு என்ன வேலை என்ன என்று அரசை குடைந்து கொண்டார்கள் முதல் ஒரு மாதத்திலேயே எல்லாவற்றையும் சரியாக கடைப்பிடித்திருந்தால் இப்போது எல்லாம் சரியாகி இருக்கும். பரவல் கட்டுப்படுவது மக்களின் கையிலேயே உள்ளது. அரசின் கையில் அல்ல. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் ஸ்ரீலங்காவில் இப்போது கொரோன இல்லை. அரசின் கட்டளைகளை மதித்து நடந்தது தான் . சற்கரைக்கோ அரிசிக்கோ முதலிடம் கொடுக்கவில்லை.
Rate this:
Cancel
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
07-ஜூலை-202009:51:54 IST Report Abuse
sankaran vaidyanathan உலக சுகாதார நிறுவனம் உலக மக்களின் ஆரோக்கியத்திற்கு முக கவசம் அணியுங்கள் ,கை உரை அணியுங்கள் சமூக விலகல் கடை பிடியுங்கள் என்று சொன்னதே ஒழிய மருந்து கண்டு பிடிக்க வில்லை - இப்பொழுதும் விழித்து எழுந்திருக்க வில்லை, மாற்றி யோசிக்க வில்லை, நுண் கிருமிகள் இருக்கின்றன சமூக இடை வெளி பின்பற்றப்பட்ட போதிலும் தொற்று நோய் பரவுகிறது என்பதை அறிந்தும் சமூக விலகல் சிறந்தது என்று அரசு கூறுகிறது ஏழை எளிய மக்கள் சிறு அறைகளில் வசிக்கிறார்கள் சிறிய சந்துகளில் அல்லது கூடாரங்களில்.அநேகமாக இரவில் மட்டும் தூங்க பயன் படுத்துகிறார்கள் நோய்த் தடுப்பாற்றல் எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உடல் அழற்சி இருக்கிறது. இதை எப்படி செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை'' நுரையீரல் நுண்ணிய காற்று அறைகளில் போய் அமர்ந்து கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும் என்றும் அங்கு தான் ரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது என்றும் சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும்.என்று லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நத்தாலி மேக்டெர்மோட் கூறியுள்ளார் .இதனைப் பற்றி விரிவான தகவல்கள் பிபிசி செய்தியில் போடப்பட்டுள்ளன . நோய் பரவுவதலை கட்டுப் படுத்த மாற்றி யோசிக்கவில்லை சமூக விலகலை கடை பிடியுங்கள் தனித்து இருங்கள் என்கிற நோக்கம் வெற்றி பெறாத பொழுது அதனையே திரும்ப சொல்வது சரியா இயல்பு வாழ்க்கை பறிபோனதுஇயற்கை தந்த ஆரோக்கியம் பெறுவதுதடுக்கப்பட்டது நோக்கம் வெற்றி பெறவில்லை முக கவசம் ஓராண்ட்டுக்கு அணிய வேண்டும் என்று அரசு அறிவிப்பு . நாட்டில் அதிக அளவில் வாகனங்கள் சாலையில் செல்வதால் புகை காற்று மாசு படுதல் தூசுகள் காற்றில் அதிகரித்தல் ஏற்படுகின்றன அதனால் முக கவசம் வெளியே செல்லும்போதெல்லாம் அணிவது அவசியம் நன்மை தரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X