புதுடில்லி : ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டதாக வருமானத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையாக இந்த வேலையை செய்ய நேரம் கொடுக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு முன்பே பலமுறை நீட்டிக்கப்பட்டது. நோய் பாதிப்புகள் ஒரு புறம் அதிகரிப்பதாலும், மற்ற சில காரணங்களாலும் ஆதார் - பான் இணைப்பு சாத்தியப்படவில்லை. இதற்கு முன்னதாக ஜூன் இறுதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வருமான வரித்துறை அறிக்கையை தாக்கல் செய்யும் நபர்கள் பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்., மாதத்தில், மத்திய அரசின் ஆதார் திட்டத்தை அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஏற்கனவே, 2019-20-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE