சீனாவில் பரவும் 'புபோனிக் பிளேக்': சிகிச்சை எடுக்காவிட்டால் 24 மணி நேரத்தில் மரணம்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
பீஜிங்: சீனாவில் பரவும் 'புபோனிக் பிளேக்' என்னும் புதுவகை நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் மங்கோலியா கோவ்ட் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பயன்னுர் நகரில் 'புபோனிக் பிளேக்' எனப்படும் நோய் 27 வயது நபர் ஒருவருக்கும் அவரது சகோதரருக்கும் (17) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் மர்மோட் எனப்படும் காட்டு
china, bubonic plague, alert, risk, spread, சீனா, புபோனிக் பிளேக், பாக்டீரியா, அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங்: சீனாவில் பரவும் 'புபோனிக் பிளேக்' என்னும் புதுவகை நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் மங்கோலியா கோவ்ட் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பயன்னுர் நகரில் 'புபோனிக் பிளேக்' எனப்படும் நோய் 27 வயது நபர் ஒருவருக்கும் அவரது சகோதரருக்கும் (17) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் மர்மோட் எனப்படும் காட்டு எலி போன்றவற்றின் இறைச்சியை சாப்பிட்டதால் நோய் ஆளாகி உள்ளதாக தெரிகிறது. எனவே மக்கள் யாரும் மர்மோட் இறைச்சியை உண்ண வேண்டாம் என்று அந்நாட்டு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா அறிவுறுத்தியுள்ளது.


latest tamil newsவிலங்குளிடம் இருந்து பரவும் இந்த புபோனிக் நோய் அவற்றை கடிக்கும் பூச்சிகள் வாயிலாக மனிதர்களுக்கும் பரவக்கூடியது. நோய் வந்து இறந்த விலங்குகளில் இருந்து வெளியாகும் திரவங்கள் வாயிலாகவும் யெர்சினியா என்ற பாக்டீரியா மூலமாகவும் இந்த நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்க்கான சிகிச்சையை உடனடியாக எடுக்காத பட்சத்தில் 24 மணி நேரத்தில் நோய் பாதித்தவருக்கு மரணம் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-202017:34:28 IST Report Abuse
J.V. Iyer காய்கறிகளை சாப்பிடுங்கள் அய்யா
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
07-ஜூலை-202014:45:52 IST Report Abuse
ocean kadappa india வவ்வால் எச்சத்தை சாப்பிட்ட எறும்பு தின்னி அதை சாப்பிட்ட பாம்பு அதை சாப்பிட்ட சீனன். அவனிடமிருந்து வூகான் குரோனா வைரஸ் வந்தது. உலக மக்கள் அழிந்து வருகின்றனர். தன்னாட்சி என்ற பெயரில் சீனா மடக்கி வைத்துள்ள மங்கோலிய நாட்டின் கோவ்ட் மாநில பகுதி பயன்னுர் நகரில் அண்ணன் தம்பி இருவரும் மர்மோட் என்ற காட்டெலி இறைச்சியை சாப்பிட்டதால் புபோனிக் பிளேக்கால் பாதிக்கப்பட்டனர் என கோவ்ட ஷின்ஹுவா என்ற செய்தி நிறுவனம் கூறுகிறது. நோயில் இறக்கும் விலங்குகளிடமிருந்து வெளியேறும் திரவங்கள் மூலம் யெர்சினியா என்ற பாக்ட்டீரியா உறுவாகிறது. இறந்த விலங்குகளை கடிக்கும் பூச்சிகளால் புபோனிக் பிளேக் நோய் மனிதர்களிடம் பரவுகிறது. நோய்க்கான சிகிச்சையைய உடனடியாக எடுக்க தவறினால் நோய் முற்றி 24மணி நேர்த்திற்குள் மரணம் சம்பவிக்கும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கிறது. இதிலிருந்து நமக்கு புரிவது என்ன வென்றால் குரோனாவை அடுத்து வரவேண்டிய உப குரோனாவிற்கு அடுத்து யெர்சினியா என்ற பாக்ட்டீரியாவுடன் மர்மோட் காட்டு எலியில் உறுவான புபோனிக் பிளேக்கும் சேர்ந்து இந்த இரண்டும் மீண்டும் உலகத்தை தாக்க உள்ளது புரிகிறது. சீனனை இனி என்ன செய்ய வேண்டு மென்பதை உலக நாடுகள் தான் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டும். அதை தடுக்க இப்போதே மருந்துகளை கண்டு பிடிக்க வேண்டும். சீனன் இப்படி ஏவும் கொடிய நோய்களை தடுப்பதே உலகத்தின் முழு நேர வேலையாக இருந்தால் மற்ற வேலைகள் சீரழியும். வறுமை தோன்றும். எஞ்சியுள்ளவர்கள் ஏலியன்கள் போல் உருமாற வேண்டி இருக்கும்.
Rate this:
Cancel
mahalakshmi - Pozhichalur, Chennai,இந்தியா
07-ஜூலை-202013:49:07 IST Report Abuse
mahalakshmi இவங்களுக்கு எத்தினை முறை பட்டாலும் புத்தி வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X