பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தான்:ஊரடங்கிலும் லட்சாதிபதியான விவசாயிகள்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

ஜெய்ப்பூர்: ஊரடங்கு காலத்திலும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 100 விவசாயிகள் லட்சாதிபதிகளாக மாறி உள்ளனர்.



latest tamil news



கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறையினரும் தொழில் முடக்கத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில விவசாயிகள் சிலர் குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதித்துள்ளனர். மாநிலத்தில் சுமார் 100 விவசாயிகள் சுமார் ரூ. 25.38 லட்சம் வருமானம் ஈட்டுகின்றனர்.

மாநிலத்தின் துங்கர்பூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றினைந்து பஹால் (புரோமோஷன் ஆப் அக்ரிகல்சுரல் அண்டு ஹார்டிகல்சுரல் பார் அட்வான்ஸ்மென்ட் ஆப் லைப்லிஹூட்ஸ்) மூலம் விவசாயிகள் வருமானத்தை ஈட்டி உள்ளனர்.

பருவகால காய்கறிகள்,பழங்களை உற்பத்தி செய்ய நிலப்பரப்புகளை பயன்படுத்துதை ஊக்கப்படுத்து மட்டுமல்லாது, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே இதன் நோக்கம்.பஹால் நோக்கமாகும்.

இத்திட்டத்தில் இணைந்த விவசாயிகள் சுமார் 100 பேர் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 580 கிலோ காய்கறிகளை உற்பத்தி செய்து அவற்றில் 70 ஆயிரத்து 350 கிலோ விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் சுமார் 25.38 லட்சம் ரூபாய் ஈட்டி உள்ளனர்.


latest tamil news



இத்திட்டம் எனது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி உள்ளது. எனது குழந்தைகள் இப்போது பள்ளிக்குச் செல்கிறார்கள், அவர்களுக்கான நல்ல உணவை என்னால் வழங்க முடிகிறது. எனது எதிர்காலம் பாதுகாப்பானது "என்கிறார் 'பஹால்' விவசாயி ஒருவர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
07-ஜூலை-202007:26:16 IST Report Abuse
Muraleedharan.M திறமை இருந்தால் பிழைக்கலாம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-202004:56:50 IST Report Abuse
J.V. Iyer இப்படி எல்லா விவசாயிகளும் நன்றாக பணம் ஈட்ட வாழ்த்துக்கள். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால், நாடு சுபிட்சமடையும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஜூலை-202000:06:52 IST Report Abuse
தல புராணம் குமாரசாமி கேல்குலேட்டரில் கணக்கு பண்ணாலும் லட்சாதிபதி வரமாட்டேங்குதே கோப்பால்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X