பொது செய்தி

இந்தியா

சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

புதுடில்லி : சூரிய சக்தியில் ரயில்களை இயக்குவதற்கான பணியை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன்மூலமாக புதிய சாதனையை இந்திய ரயில்வே படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.latest tamil newsஇந்திய ரயில்வே, சூரிய சக்தியால் ரயில்களை இயக்குவதற்கான புதிய திட்டத்தை தற்போது துவங்கியுள்ளது. ரயில்வேயின் வழித்தடங்களில் சூரிய சக்தியுடன் ரயில்கள் இணைக்கப்படும். இதற்கான செயல்பாடுகளை இந்திய ரயில்வே ஏற்கனவே துவங்கி பாதியளவு முடிந்துவிட்டது. ரயில்வே தனது பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் பினாவில், ஒரு சூரிய மின்சக்தி நிலையம் (Solar) அமைத்து அதற்கான பணிகளில் மும்முரமாக களமிறங்கி யுள்ளது. இது 1.7 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் மூலம் சூரியசக்தியுடன் ரயில்களை இணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


latest tamil newsரயில்களை இயக்க சூரிய ஆற்றல் (Solar Power) பயன்படுத்தப்படுவது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை என ரயில்வே கூறுகிறது. இதன் சிறப்பு என்னவெனில், இங்கிருந்து 25,000 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் உதவியுடன் ரயில்களை இயக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். தற்போது காலியாக உள்ள ரயில்வேயின் நிலத்தில் பிஹெச்எல் நிறுவனத்துடன் (BHEL) இணைந்து, ம.பி.,யின் பினாவில் 1.7 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் (Solar Power Station) அமைக்கப்பட்டுள்ளது. ரயிலை இயக்கக்கூடிய வகையில் உலகம் முழுவதும் இதுபோன்ற மின் உற்பத்தி நிலையம் இல்லை. உலகின் பிற ரயில் நெட்வொர்க்குகள் சூரிய சக்தியை முதன்மையாக நிலையங்கள், குடியிருப்பு காலனிகள் மற்றும் அலுவலகங்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகின்றன.

சில ரயில்களின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி பேனல் (Solar Panel) இந்திய ரயில்வே நிறுவியுள்ளது. இதன் காரணமாக ரயில் பெட்டிகளில் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் இப்போது வரை, எந்த ரயில் நெட்வொர்க்கும் ரயில்களை இயக்க சூரிய சக்தியைப் பயன்படுத்தவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஜூலை-202008:49:34 IST Report Abuse
Sampath Kumar பொய்யும் புரட்டும் துணியை கொண்டு பிழைத்துவரும் கும்பல் அழியும் காலம் வந்து விட்டது அடிக்கிற அடியில் தாரை thappatai கல் கிழிந்து தொங்க வேண்டும்
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
08-ஜூலை-202008:03:35 IST Report Abuse
natarajan s முழு ரயிலையும் இயக்கும் அளவிற்கு சூரிய சக்தியை பயன் படுத்த முடியாது. கோச் மேல பொருத்தப்படும் Photo Votaic Cell மூலம் பெறப்படும் மின்சாரம், கோச்சில் உள்ள மின்சார தேவையை 60 % பூர்த்தி செய்யும் அந்தவரைக்கும் பேட்டரி பவர் சேமிப்பு நடக்கும் , இரவில் பேட்டரி மூலம்தான் மின்சாரம் . சமீபத்திய LHB கோச் பேட்டரி பேக் அப் இல்லாமல் generator van மூலம் மின்சாரம் அளிக்கப்படுகிறது அந்த generator இயக்கும் செலவு குறையும். மேலும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் 7500 HP pulling power என்ஜினுக்கு கொடுக்க முடியாது.
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
06-ஜூலை-202022:36:28 IST Report Abuse
Ray TRAIN-18, INDIA’S FIRST AND FASTEST TRAIN SET, MANUFACTURED IN CHENNAI’S INTEGRAL COACH FACTORY (ICF) TICKED ALL THESE BOXES. MADE AT A COST OF RS 97 CRORE, IT HAS RUN 1 LAKH KM WITHOUT ANY HITCH ON THE NEW DELHI-VARANASI ROUTE AS THE VANDE BHARAT EXPRESS. WHEN IT STARTED OPERATIONS IN FEBRUARY, IT WAS ANNOUNCED THAT PROTOTYPES WOULD REPLACE SHATABDIS ACROSS THE COUNTRY.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X