கிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி குற்றச்சாட்டு

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

புதுடில்லி: காங்., எம்.பி., ராகுல் வேலை செய்யாமல், தொடர்ந்து கிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டி உள்ளார்.



latest tamil news



பிரதமர் மோடியையும், அவரது ஆட்சியையும் காங்., எம்.பி., ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சீன விவகாரம், கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னை என அடுக்கடுக்காக புகார் கூறி வருகிறார். இந்நிலையில் ராகுலின் இந்நடவடிக்கையை மத்திய அமைச்சர் நக்வி விமர்சித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் கூறியதாவது: ராகுல் எந்த வேலையையும் செய்வதில்லை. ஆனால் தொடர்ந்து கிளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழு கூட்டங்களில் அவர் இதுவரை பங்கேற்றதில்லை. எதிர்மறை நிறைந்த ஒருவர், அனைத்தையும் எதிர்மறையாகவே பார்ப்பார். இதனால் தான் அவர் மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். வணிகம், விவசாயம், பெண்கள் உரிமைகள், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்களை அவர் பார்ப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
07-ஜூலை-202021:54:28 IST Report Abuse
Tamilnesan பாவம் பப்புவை வையாதீங்க......அவர் தினமும் அறிக்கை என்கிற பெயரில் உளறுவதால், பாஜக செல்வாக்கு பெருகுகிறது. தேர்தலில் பிரச்சாரம் செய்யாமலே பாஜக எளிதாக வெற்றி பெற முடிகிறது. குழந்தையை ஒன்னும் சொல்லாதீங்க.
Rate this:
Cancel
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
07-ஜூலை-202017:54:26 IST Report Abuse
ESSEN பப்புவை தேசதுரோகி பட்டம் சூட்டி உள்ளே தள்ள வேண்டியதுதானே .
Rate this:
Cancel
Senthil Kumar - singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-202005:43:45 IST Report Abuse
Senthil Kumar பிஜேபி யின் தில்லு முல்லுகளை புரிந்துகொண்ட மக்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள். கடந்த தேர்தலிலேயே EVM ல் முறைகேடு செய்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X