கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
bike, police, beat, court, order, case, file, பைக், சென்றவர், போலீஸ், தாக்குல், வழக்கு, மதுரை, உயர்நீதிமன்றம், உத்தரவு

மதுரை: பைக்கில் சென்றவரை உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்திற்காக தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தைச் சேர்ந்த தங்கத்துரை என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி புளியங்குடி சாலையில் பைக்கில் சென்ற போது தன்னை மடக்கி ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் போலீசார் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, துணை இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசா் மீது வழக்கு பதிவு செய்ய சங்கரன்கோவில் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதாகவும் ஆனால் வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் மனுவில் தங்கதுரை தெரிவித்துள்ளார்.


latest tamil news



மனு விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலேயே இது தொடர்பான புகார் அளிக்கப்பட்டதால் புகாரை பதிவு செய்ய மறுக்கின்றனர் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து புகார் தொடர்பாக வேறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவும், வழக்கை டி.எஸ்.பி., விசாரிக்கவும் தென்காசி எஸ்.பி., நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
07-ஜூலை-202014:16:01 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI வர வர போலீஸ்காரங்க அட்டூழியம் அதிகமாகிவருகிறது அவ்வளவு பெரிய லத்தி கொடுக்க கூடாது .கட்சிக்காரங்களா கண்டா பயப்படுறாங்க .
Rate this:
Cancel
smoorthy - bangalore,இந்தியா
07-ஜூலை-202008:24:07 IST Report Abuse
smoorthy காவல் துறை நடை முறை மீது சந்தேகம் வருவதற்கு யார் காரணம் / சில காவல் துறை அதிகாரிகள் கூட போலீஸ்காரர்களும் தான் / இவர்களை மூன்று , நான்கு வருடங்கள் சஸ்பெண்ட் செய்தால் தான் இவர்கள் அடங்குவார்கள் போல் தெரிகிறது / கோர்ட் ஆர்டர் மதிக்க தெரியாதவர்கள் பதிவில் இருந்து தூக்கி ஏறிய பட வேண்டும் /
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
07-ஜூலை-202007:13:31 IST Report Abuse
siriyaar ஒரு செய்தி ஒரு ஊர்ல 105 ங்குது இன்னென்னு கோவை பாவட்டம் முழதாக 60 ங்குது, ஒருவேளை 60 ஙக்கிறது 10 ஆள் வகுக்கப்பட்ட எண்ணோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X