பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் டிஸ்சார்ஜ்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020
Share
Advertisement

கோவை: கோவையில் இன்று, 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்வபுரம் ஐயப்பா நகரில் மட்டும், 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. தினமும் 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில், தொடர்ந்து கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டது.


latest tamil news



அதனடிப்படையில், செல்வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் தங்க நகைப்பட்டறையில் பணிபுரியும், 140 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனையில், 114 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகாதாரத் துறை இதை மறுத்துள்ளதோடு, அப்பகுதியில், 35 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கோவையில் மேலும் கணபதி மாநகர், ரத்தினபுரி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 32 பேர் என, 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.


பாதிப்பு 802ஆக அதிகரிப்பு


மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் இன்று, 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 802 ஆக உயர்ந்துள்ளது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த, 26 ஆண்கள், 12 பெண்கள், தலா ஒரு ஆண், பெண் குழந்தைகள் என, 40 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X