பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'! டிக்டாக் இடத்திற்கு குறி

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் சீன 'ஆப்'பான 'டிக் டாக்'குக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, இன்ஸ்டாகிராமின் 'ரீல்ஸ்' 'ஆப்' இந்தியாவில் களமிறங்க தயாராகி வருகிறது.



latest tamil news



கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சீனாவின் 59 'ஆப்'களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. டிக் டாக், ஹலோ, லைக், ஷேர் இட் உள்ளிட்ட ஆப்களும் இதில் அடக்கம். இந்த தடையை அடுத்து, டிக்டாக் போன்ற, 'ஆப்' ஆன, 'ரீல்ஸ்'சை, இன்ஸ்டாகிராம் இந்தியாவில் களமிறக்க உள்ளது.

பேஸ்புக்கால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராம், கடந்த ஆண்டு 'ரீல்ஸ்'சை அறிமுகப்படுத்தியது. டிக் டாக் போலவே, பின்னணி இசையில் 15 நொடிகள் ஓடும் வீடியோவில் நடிக்கலாம். பிரேசிலில் சோதனை முயற்சியில் அறிமுகமாக இந்த 'ஆப்', பிரான்ஸ், ஜெர்மனியிலும் பின்னர் அறிமுகமானது.


latest tamil news



'ரீல்ஸ்'சை, இந்தியாவில் களமிறக்குவது குறித்து, பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'மேம்படுத்தப்பட்ட 'ரீல்ஸ்' வசதியை சில நாடுகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். எந்தெந்த நாடுகளுக்கு இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும், எப்போது அறிமுகம் எனவும் உறுதி செய்யப்படவில்லை' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
07-ஜூலை-202009:43:29 IST Report Abuse
Thirumal Kumaresan நம்ம நாட்டு தயாரிப்புக்கு அரசுகள் ஆதரவு அளிக்கவேண்டும்.இது ஒன்றும் பாராட்டும் செயல் அல்ல
Rate this:
Cancel
SUNDAR - chennai,இந்தியா
07-ஜூலை-202009:12:48 IST Report Abuse
SUNDAR நமக்கு CHANDIRAMANDALAM செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு செயற்கைக்கோள் விடும் சக்தி ஆற்றல் இருக்கும்போது ஏன் இந்த சில்லறை விஷயத்திற்கு நாம் நமது ஆற்றலை செலவழிக்கவில்லை.
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
07-ஜூலை-202007:03:27 IST Report Abuse
Muraleedharan.M நம்ம IT மக்கள் வேலை செய்யும் நேரத்தில் கான்டீனில் அமர்ந்து கதை அடிக்கூடாது. அதனால் தான் கொரோனா சமயத்தில் வீட்டில் அமர்ந்து ஆன்லைனில் வேலை சிரமபடுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X