தெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து நேற்று ஒரு நாளில் 1,590 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) மேலும் 1,590 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. மாநிலத்தின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23,902 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றால் புதிதாக 7 பேர் பலியாகினர். இதனால் தெலுங்கானாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக அதிகரித்தது. நேற்று ஒரு நாளில் 1,166 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,703 ஆக உயர்ந்தது.


latest tamil news



சுகாதாரதுறை அதிகாரிகளின் கூற்றுபடி, ஐதராபாத்தில் 1277 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 125 பேருக்கு மேட்சலில் தொற்று உறுதியானது. தொடர்ந்து, ரங்காரெட்டியில் 82 பேர், சூர்யாபேட்டையில் 23 பேர், சங்காரெட்டி மற்றும் மஹபூப்நகரில் தலா 19 பேர், நல்கொண்டாவில் 14 பேர், வனபார்த்தி மற்றும் கரீம்நகரில் தலா 4 பேர், நிஜாமாபாத் மற்றும்மெடாக்கில் இருந்து தலா 3 பேர், நிர்மல், விக்ராபாத், கோத்தகுடம், ஜங்கான் பகுதிகளில் தலா 2 பேர், கட்வால், சிர்சில்லா, சித்திபேட்டை, வாரங்கல் (கிராமபுறம்), நாராயண்பேட்டை, பெடப்பள்ளி, யாதாத்ரி, கமாரெட்டி மற்றும் ஆதிலாபாத் மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் வீட்டு தனிமை மற்றும் நிறுவன கவனிப்பில் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 10,904 ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் 5,290 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 1,590 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 3,700 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதுவரை 1,15,835 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 23,903 மாதிரிகள் நேர்மறையானவை என தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X