பொது செய்தி

தமிழ்நாடு

அபுதாபியில் சிக்கி தவித்த 179 இந்தியர்கள் வருகை

Added : ஜூலை 06, 2020
Share
Advertisement

சென்னை; ஐக்கிய அரபு நாடான - யு.ஏ.இ.,யில் சிக்கித் தவித்த, 179 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மத்திய அரசு, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், சிறப்பு விமானங்களை இயக்கி, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, யு.ஏ.இ., நாட்டின் தலைநகர் அபுதாபியில் இருந்து, சிறப்பு விமானம், 179 இந்தியர்களுடன் நேற்று காலை, 7:30 மணிக்கு, சென்னைக்கு வந்தது.

அந்த விமானத்தில், 179 இந்தியர்கள் வந்தனர். அவர்கள் அனைவருக்கும், சென்னை விமான நிலையத்தில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்துதலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.விமான சேவைகள் ரத்துமேற்கு வங்க மாநில அரசு, டில்லி, மும்பை, சென்னை, நாக்பூர், ஆமதாபாத், புனே ஆகிய, ஆறு நகரங்களில் இருந்து, இம்மாதம், 6ம் தேதி முதல், 19ம் தேதி வரை, அம்மாநிலத்திற்கு விமானங்கள் இயக்க தடை விதித்துள்ளது.

அதனால், சென்னையில் இருந்து, கோல்கட்டா, பேக்டோக்ரா நகரங்களுக்கு செல்ல வேண்டிய, ஐந்து விமானங்கள்; அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய, ஐந்து விமானங்கள் என, 10 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.சென்னையில் இருந்து நேற்று, 26 விமானங்கள், பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து, 25 விமானங்கள் சென்னைக்கு வந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X