பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; முதல்வர் நாளை திறப்பு

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: சென்னையில் 750 படுக்கை வசதியுடன், நூலகம், வைபை, டிவி வசதியுடன் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை, முதல்வர் பழனிசாமி நாளை(ஜூலை 7) திறந்து வைக்க உள்ளார்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலில், நாட்டில் 2வது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. இதில் சென்னை அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், சென்னை - கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டடம், கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 750 படுக்கை வசதிகளுடன் தயாராகி உள்ள இந்த மருத்துவமனையில், 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை முதல்வர் பழனிசாமி நாளை(ஜூலை 7) திறந்து வைக்க உள்ளார்.


latest tamil news




அதிநவீன வசதிகள்:


* மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க 25 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது.
* சிகிச்சை பெறுபவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 20 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் டிவி வசதி
* 30 பேர் புத்தகம் படிக்கும் வகையில் நூலகம்
* வீடியோ கான்பரன்ஸ் வழியாக யோகா பயிற்சி பெறலாம்
* வைபை வசதி
* சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து பரிசோதனை வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஜூலை-202000:24:02 IST Report Abuse
தல புராணம் பொதுவா உலகம் பூரா கொரோனா முதியவர்கள் வசிக்கும் இடத்தை நெருங்காத வகையில் அனைத்து திட்டங்களும் போடுவார்கள்.. வெளியே சுற்றும் இளைய தலைமுறை, முதியவர்களை தவிருங்கள். அவர்களை பாதுகாப்பாக வையுங்கள் என்று. ஆனா இங்கே தலைகீழா யோசிச்சு திட்டம் போட்டு முதியவர் நல மருத்துவ மையத்திலேயே கொரோனா நோயாளிகளை கொண்டு வர்றாங்க ..சும்மாவா சொல்றோம் மூடர்கூடம்ன்னு..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஜூலை-202000:18:32 IST Report Abuse
தல புராணம் வைஃபை, டிவி, நூலகம் இப்படி வசதிகளை பாத்தா இது சாமானியனுக்காக இல்லைன்னு மட்டும் தெளிவா தெரியுது.. எது எப்படியோ, பாத்ரூமில் தவறாமல் தண்ணீர் வர்ற மாதிரி அதி நவீன வசதிகளையும் சேர்த்துடுங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X