பொது செய்தி

தமிழ்நாடு

அணைகளுக்கு நீர்வரத்து குறைவு

Added : ஜூலை 06, 2020
Share
Advertisement

சென்னை; தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால், முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, வைகை, அமராவதி, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனுார், சோலையாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், திருமூர்த்தி ஆகிய, 15 அணைகள் வாயிலாக, மாநிலத்தின் பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன. இவற்றில் பல அணைகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளன.

இந்த அணைகளுக்கு, தென்மேற்கு பருவமழை காலங்களில், அதிகளவில் நீர்வரத்து கிடைக்கிறது.கர்நாடகா, கேரளா மாநிலங்களில் துவங்கிய தென்மேற்கு பருவமழையால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகளுக்கு, நீர்வரத்து கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல அணைகளுக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 300 கனஅடிக்கும் குறைவாகவே உள்ளது. கோவை - சோலையாறு அணைக்கு மட்டும் வினாடிக்கு, 2,259 கனஅடி நீர்வரத்து கிடைத்து வருகிறது. பருவமழை துவங்கி, ஒரு மாதத்திற்கு மேலாகியும், அணைகள் நிரம்பவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X