மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
NIA files chargesheet against J&K DSP, 5 others in UAPA case

புதுடில்லி :பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட, ஜம்மு -- காஷ்மீர் முன்னாள் டி.எஸ்.பி., தேவிந்தர் சிங் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.ஜம்மு -- காஷ்மீரில், டி.எஸ்.பி.,யாக பதவி வகித்தவர், தேவிந்தர் சிங். இவர், பாக்., பயங்கரவாதிகளை, ஜம்மு -- காஷ்மீருக்குள் ஊடுருவ உதவியபோது, கடந்த ஜனவரியில், கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


latest tamil news




இவர் மீது, டில்லி போலீசார், 90 நாட்களுக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறியதை அடுத்து, டில்லி நீதிமன்றம், கடந்த மாதம், அவருக்கு ஜாமின் வழங்கியது.இந்நிலையில், தேவிந்தர் சிங் மீது, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜாமின் கிடைத்தும், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வில்லை. இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.இந்நிலையில், முன்னாள் டி.எஸ்.பி., தேவிந்தர் சிங் உட்பட, ஆறு பேர் மீது, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
07-ஜூலை-202009:39:22 IST Report Abuse
Hari எப்போதும் டில்லி போலீசு தீவிரவாதிகளுக்கே ஆதரவாக செயல்படுவது எப்படி ,மிலிட்டரி போல அணைத்து போலீஸ் ,மத்திய அரசின் கைகளில் வரணும்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-202000:08:26 IST Report Abuse
Tamilan கற்பழிக்க துணிந்த தொழில் அதிபர் சாதாரண ஆளாக இருக்க மாட்டார் . கேஸை பதிந்தால் இவர் வேலை பறிபோய்விடும் அல்லது உயிரே பறிபோய்விடலாம் . பேசாமல் கொடுத்த பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் . இப்போது நிறைய பணத்திற்கு ஆசைப்பட்டு , ஜெயிலுக்கு போக வேண்டியதாயிற்று .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X