சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., உயிருக்கு உலையான நாய்

Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 எஸ்.ஐ., உயிருக்கு உலையான நாய்

சேலம்; சேலத்தில், நாய் மீது பைக் மோதிய விபத்தில், எஸ்.எஸ்.ஐ., பலியானார்.

சேலம், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன், எஸ்.எஸ்.ஐ., சக்திவேல், 46. இவர் ஜூன், 28ம் தேதி இரவு, மாசிநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் பணியாற்றினார். பணி முடித்து, ஹீரோ ஹோண்டா பைக்கில், வீட்டுக்கு திரும்பினார்.

சின்னத்திருப்பதி அருகே வந்தபோது, சாலையில் படுத்து கிடந்த நாய் மீது, பைக் மோதியது.இதில், சக்திவேல் துாக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த சக்திவேல், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு இறந்தார்.அவரது உடல், சேலம் பழைய சூரமங்கலத்தில், போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
12-ஜூலை-202017:12:10 IST Report Abuse
SIVA G  india நாய்,குரங்கு திடீர் என சாலைகளை கடக்கும். மற்ற விலங்குகள் விரட்டபடும் போதுதான் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு. சிறு குழந்தைகளாலும் சாலைகளில் விபத்துகள் அதிகம்.
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
11-ஜூலை-202019:46:36 IST Report Abuse
.Dr.A.Joseph என்ன பாவம் செய்தானோ என்று தான் நினைக்க தோன்றுகிறது .
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
08-ஜூலை-202018:05:34 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி காவல் அதிகாரி இறந்தமைக்கு 'ஆழ்ந்த வருத்தத்தை' தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் இந்த மரணத்தை இந்த போலீஸ் அதிகாரியே வலிய சென்று வாங்கிக் கொண்டார். ஊர்ப் பயலுக்கு எல்லாம் தலைக்கு கவசம் போடாவிட்டால் அபராதம் போடுகிறவர் இவரே. அப்புறம் இவர் மட்டும் தலைக்கவசம் இல்லாமல் எப்படிப் போகலாம்? இதற்கான தண்டனையை ஏதாவது ஒருவகையில் இவரில்லாவிட்டாலும் இவர் சார்ந்த குடும்பத்தினர் செலுத்தும் படி செய்து அதை அனைத்து போலீசாரும் அறியும்படி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X