பா.ஜ.,வினர் மலிவான அரசியல் தந்திரம்: காங்., குற்றச்சாட்டு

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
ராகுல், மலிவான அரசயல், பார்லிமென்ட் நிலைக்குழு, எல்லை பிரச்னை, பா.ஜ.,குற்றச்சாட்டு, காங்.,

புதுடில்லி : 'ராகுல் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, அவரை குறிவைத்து தாக்கி, பா.ஜ.,வினர் மலிவான அரசியல் தந்திரத்தில் ஈடுபடுகின்றனர்' என, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'காங்கிரஸ் எம்.பி., ராகுல், ராணுவம் தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்பது இல்லை; எல்லை பிரச்னை குறித்து, அவர் பேசுவது ஆச்சரியமாக உள்ளது' என, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா சமீபத்தில் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, பவன் கெரா ஆகியோர் கூறியதாவது: இந்திய - சீன எல்லை பிரச்னை தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். மேலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி, ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவை தொடர்பாக, ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டி வருகிறார்.

மத்திய அரசில் இருப்பவர்கள், இதற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, குற்றச்சாட்டு கூறியவர்களை குறிவைத்து தாக்கும் மலிவான அரசியல் நடத்துகின்றனர். சீன ராணுவம், லடாக் பகுதியில் நம் எல்லைக்குள் ஊடுருவி, நம் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. ஆனால், சீனா ஊடுரு வவில்லை என, அந்த நாட்டுக்கு, பிரதமர் மோடி, நற்சான்றிதழ் அளிக்கிறார்.

ராகுல் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, தலைப்புச் செய்தியில் இடம் பெறுவதற்காக, மலிவான தந்திரங்களில், பா.ஜ.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். ராகுலை தாக்கிப் பேசினால், சீன ராணுவம் ஆக்கிரமித்த நிலப்பகுதி, நம்மிடம் திரும்ப வந்து விடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
08-ஜூலை-202013:59:19 IST Report Abuse
Nagarajan D BJP மலிவான அரசியல் செய்யட்டும், அவர்கள் என்ன உங்களை போல் ஒரு திருட்டு புனை பெயரை வைத்தா பிழைப்பை படுத்துகிறார்கள்? முதலாளியை அடித்தால் அடிமைகளுக்கு வலிக்க தானே செய்யும்.... நேரு கூட்டம் ஒரு கேடு கெட்ட கூட்டம். அந்த கேவலங்கள் ஒழிந்தால் தான் காங்கிரஸுக்கும் நல்லது இந்தியாவிற்கும் நல்லது
Rate this:
Cancel
07-ஜூலை-202022:26:07 IST Report Abuse
kulandhai Kannan நல்ல வேளை, தற்சமயம் காங்கிரஸ் மத்திய ஆட்சியில் இல்லை
Rate this:
Cancel
DINAKARAN T S - CHENN,இந்தியா
07-ஜூலை-202019:37:23 IST Report Abuse
DINAKARAN  T S ராணுவ தளபதிகள், இந்நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் சொல்வதெல்லாம் பொய். இந்த அரிச்சந்திரன் மகானுபாவன் சொல்றது மட்டும் மெய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X