பொது செய்தி

தமிழ்நாடு

2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; முதல்வர் இன்று திறப்பு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை : சென்னை, கிண்டியில் உள்ள, தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டடம், இரண்டு வாரத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை, முதல்வர் இ.பி.எஸ்., இன்று(ஜூலை 7) துவக்கி வைக்க உள்ளார்.latest tamil newsஇதில், மொத்தம், 750 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா தொற்று சிகிச்சைக்காக, 500 படுக்கை வசதியும்; தீவிர சிகிச்சை பிரிவுக்காக, 70 படுக்கைகளும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்துடன், 300 படுக்கைகளில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கென நவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள, இந்த மருத்துவமனையை, விரைவில், முதல்வர் இ.பி.எஸ்., இன்று துவக்கி வைக்க உள்ளார்.


latest tamil news


இது குறித்து, கொரோனா சிறப்பு மருத்துவமனையின் தொடர்பு அதிகாரி, ஆனந்த்குமார் கூறியதாவது: இந்த மருத்துவமனையில், 25 வென்டிலேட்டர் வசதி உள்ளது. நோயாளி மருத்துவமனைக்கு நுழையும் போது, ஆக்சிஜன் செலுத்தும் வகையில் வசதி உள்ளது. சி.டி., ஸ்கேன் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில், 20 பேர் அமர்ந்து, 'டிவி' பார்க்கும் வசதி, 30 பேர் புத்தகம் படிக்கும் நுாலக வசதியும் உண்டு. வீடியோ காட்சிகள் வாயிலாக, 50 பேருக்கு யோகா பயிற்சி அளிப்பதற்கான வசதி உள்ளது. 'வைபை' வசதி உள்ளதால், நோயாளிகள் வீட்டில் உள்ளோரிடம், காணொலி காட்சியில் பேச முடியும்.


latest tamil newsசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட உள்ள, இந்த மருத்துவமனைக்கு, தலா, 100 டாக்டர்கள், நர்ஸ்கள், மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அறைகளும், காற்றோட்டமான வகையில் உள்ளன. இதனால், இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், வீட்டில் இருப்பதை போன்று உணர்வர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
07-ஜூலை-202016:19:20 IST Report Abuse
thamodaran chinnasamy ஆமாம் ஆமாம், நீங்க நெனைக்குறமாதிரி எதுவும் நடக்கலை என்கின்ற ஆதங்கமும் மக்களுக்கு நல்லாப்புரியுது .
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-202005:01:13 IST Report Abuse
Mani . V ஐயா, கௌரவ டாக்டர் ஐயா போகிற போக்கை பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையுமே கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டி வரலாம். அதனால் நீங்கள் தினமும் சில மருத்துவமனை திறப்பு விழாக்களுக்கு சென்று வர தயாராகவே இருங்கள். (தினமலரின் இன்னொரு செய்தி: "முழு ஊரடங்கு நாளில் டாஸ்மாக் கடை திறப்பு") வரலாற்றில் உங்களுக்கு ஒரு தனியிடம் உண்டுங்கோ. சரி, அந்த மருத்துவமனையை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் திறந்தால் செல்லாதா? அனைத்திலும் அரசியல்.
Rate this:
Valliappan - Chennai,இந்தியா
07-ஜூலை-202012:52:25 IST Report Abuse
Valliappanavar aatchilyil avar thirakkirar ithil enna ungaluku pirachinai....
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-ஜூலை-202001:31:45 IST Report Abuse
மலரின் மகள் சீனா உருவாக்கிய வ்ட்டுன் கொறன ஆஸ்பத்திரியை பெருமளவில் பாராட்டினார்கள். நாமும் அவர்களை விட சிறப்பாக பத்தாயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை தில்லியிலும் அதே போல தேவைக்கேற்ப மாநிலங்களில் உடனடியாக சிறப்பாக பல படுக்கை மருத்துவமனைகளை உருவாக்குகிறோம். நம்மிடம் இன்று வேகமாகா சிறப்பாக செயலாற்றும் கட்டமைப்புக்கள் உள்ளன. ஊழல் என்ற ஒன்று மட்டும் இங்கு குறைந்தால் உலகில் மிகவும் பலசாலி நாம் தான். எல்லாவற்றிலும் கமிஷன் பார்க்கவேண்டும், என்று என்னும் மனநிலை உள்ள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தொலைந்தால் சுபிக்ஸம் நமக்குத்தான். அப்படித்தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X