நவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை'

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Drone Wars, China, armed drones, Pakistan

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு, நான்கு அதி நவீன தாக்குதல் ரக உளவு விமானங்களை, சீனா, 'சப்ளை' செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில், சாலை திட்டங்கள், துறைமுக திட்டங்கள், சீனா நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில், சீனா சார்பில் புதிதாக கடற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு சாலை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news



இந்நிலையில், இந்த இரண்டு திட்டங்களின் பாதுகாப்புக்காக, சீனா சார்பில், பாகிஸ்தானுக்கு, நான்கு ஆள் இல்லா உளவு விமானங்கள் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உளவு விமானங்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், தாக்குதல் நடத்தும் திறனும் உடையவை.

ஏற்கனவே இதுபோன்ற உளவு விமானங்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்துள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு, இந்த உளவு விமானங்களை அளிக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
07-ஜூலை-202010:24:35 IST Report Abuse
Anand நம்ம பபூனுக்கு மிகவும் சந்தோஷமான செய்தி. துள்ளி குதிப்பான்.
Rate this:
Cancel
Thangavel Vel batam இந்தோனேஷியா யாரும் பயப்பட வேண்டாம்.. சீனா காரன் ஏற்கனவே சில பல ஆப்ரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு விற்றுள்ளான்... மேலெழும்பும் விமானம் தரை இறங்குவதில் உள்ள சிக்கலால் 90 விபத்துகளில் சிக்குகிறது.. அவன் copy அடிக்கும் போது ஏற்பட்ட தவறை இன்னும் சரி செய்ய வில்லை என்கிறார்கள்..
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
07-ஜூலை-202009:54:33 IST Report Abuse
M.COM.N.K.K. கோமாளி கோமாளியுடன்தான் சேருவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X