பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் முதலீடு: சீன பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்து, சீன நிறுவனங்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை, மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.



latest tamil news



கடந்த மாதம், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சீனாவை சேர்ந்த, 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதுகுறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: கடந்த ஏப்ரல் மாதம், முதலீடு செய்வதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டன. அதன்படி, அண்டை நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என்றால், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகும். புதிய அல்லது கூடுதல் நிதி முதலீடுகளுக்கும், இந்த விதிமுறைகள் பொருந்தும்.


latest tamil news


இந்நிலையில், இந்தியாவில் முதலீடு செய்ய, சீன நிறுவனங்கள், 50 முதலீட்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. எனினும், இந்திய - சீனா இடையிலான பிரச்னையால், இந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளன. அவற்றை பரிசீலிப்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த விஷயத்தில், கவனமாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
08-ஜூலை-202006:20:07 IST Report Abuse
Ray சீனாவை கட்டோடு வெறுக்கும் சோம்பேறிகளின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் நம் நாடும் தொழில் வளத்தில் விரைந்து முன்னேற ஒவ்வொரு இந்தியனும் அரசியல் தலைவரும் ஆண்களும் பெண்களும் "தொழிலாளியும்" சூளுரைப்போம் நம் நாடு நமது வீடு நமது ஊர் நமது பொது சொத்துக்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக உலகமே "இந்திய தரம்" என்று பெருமை கொள்ளும் விதமாக படைப்போமே
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஜூலை-202006:10:31 IST Report Abuse
தல புராணம் முன்பு பதிவிட்ட கருத்தையே மறுபடியும் பதிவிடுகிறேன்.. இரண்டு மணிநேர பேச்சு வார்த்தையில் சமாதானமாகி விட்டார்கள்.. தேர்தலுக்காக இருபது ராணுவவீரர்களின் உயிர்பலி முடிந்து விட்டது.. இந்த தேசபக்தி ஈரவெங்காயம் எல்லாம் உங்களுக்கு மட்டும் தான். பிரதமரின் பெருமுதலாளிகளுக்கு இல்லை.. முக்கியமாக, WTO, FDI, Market, Capitalism, Make (Fake) in India, Growth, Removal of Subsidies to Poor, என்று இந்தியாவை தங்கத் தாம்பாளத்தில் வைத்து கூறு போட்டு, வெளிநாட்டு வியாபாரிகளுக்கு விற்று கொண்டிருந்தார்கள்.. அப்படி சுலபமாக வாங்குவதை விட்டு விட்டு, கீழே கிடந்த ஒரு பருக்கையை திருடி திங்க ஆசைப்பட்டதால் சீனாவுக்கு பெருத்த நஷ்டம் தான்.. மோடிஜி கூட தெளிவாக சொன்னார்.. எல்லை விரிவுபடுத்துவது என்பது பழைய காலம் என்று.. டெண்டர் போட்டு வாங்குங்கள், நாங்கள் விற்க தயார் என்பதை சூசகமாக, தெளிவாக சொல்லி விட்டார். பார்டர் பத்திரமாக இருக்கும்.. சீனாவுக்கு கொஞ்ச நாளைக்கி வாய்ப்பு இல்லை. ஆனால் "இந்தியா விற்பனைக்கு" நிற்காமல் தொடரும்..
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
07-ஜூலை-202016:53:17 IST Report Abuse
Thirumal Kumaresan தேவை இல்லை,என்ன வளம் இல்லை நம் நாட்டில்,இல்லாததை நமது நாட்டிலேயே தேடுங்கள் கிடைக்கும்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஜூலை-202005:57:42 IST Report Abuse
தல புராணம்//நம் நாட்டில்,இல்லாததை நமது நாட்டிலேயே தேடுங்கள் கிடைக்கும். // தேர்தல் நிதி பத்திரம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X