பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

குன்னூர்: தமிழகம், கேரளாவில், 16 உரநிறுவனங்கள், இரு தேயிலை தொழிற்சாலை என, 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.



latest tamil news



நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரியம் சார்பில், தென் மாநிலங்களில், தேயிலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில், தர உறுதிப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு ஆணைகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, தமிழகத்தில் கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், கேரளாவில், பாலக்காடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை உற்பத்தி நிறுவனங்கள்,கிடங்குகள், உயிர் உரம் உற்பத்தி நிறுவனங்களில் கலப்படம், உற்பத்தி விபரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


latest tamil news



இது தொடர்பாக வாரிய செயல் இயக்குநர் பாலாஜி கூறுகையில், "தமிழகம், கேரளாவில், தேயிலை கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும், 22 நிறுவனங்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் பெறப்பட்ட தகவல்களில், உரிய தகவல் இல்லாமலும், சரிவர கணக்கு பராமரிக்காதது கண்டறியப்பட்டு, 16 உர யூனிட்கள் மற்றும் நீலகிரி மாவட்டம் கேத்தியில் உரிமம் பெறாத தேயிலை தூள் தயாரித்த தொழிற்சாலை, தேனிமாவட்டத்தில் கணக்கு பராமரிக்காத தொழிற்சாலை என மொத்தம், 18 நிறுவனங்களின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது," என்றார்

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
07-ஜூலை-202016:44:37 IST Report Abuse
elakkumanan தீய சக்தியின் திருவிளையாடல் இல்லாத இருக்குமா?
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
07-ஜூலை-202011:05:40 IST Report Abuse
JeevaKiran முன்பெல்லாம் இந்தியன் காபி என்று மத்திய அரசாங்கத்தின் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதனுடைய ரீடைல் RETAIL) கடைகளில் நல்ல தரமான காபி தூள் கிடைக்கும். இப்போ அது இருக்கும் சுவடே இல்லை. அப்படி இருக்கு அரசாங்கத்தின் நிறுவனத்தின் நிலைமை.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
07-ஜூலை-202010:59:31 IST Report Abuse
siriyaar கூட்டுறவு சங்கங்களின் மீதான நடவடிக்கையை ஆவலுடன் எதிபார்க்கின்றனர் விவசாயிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X