தமிழ்நாடு

டாக்டர்களுக்கு 'கேர் சென்டர்'

Added : ஜூலை 07, 2020
Share
Advertisement
மதுரை, மதுரையில் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை கவனிக்க இரு இடங்களில் தனி மையங்களை கலெக்டர் வினய் ஒதுக்கியுள்ளார்.கலெக்டர் அலுவலகத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்களுடனான கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது. இந்திய மருத்துவ சங்க மதுரை கிளை தலைவர் அழகுவெங்கடேசன், செயலாளர் அமானுல்லா முன்னிலை

மதுரை, மதுரையில் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை கவனிக்க இரு இடங்களில் தனி மையங்களை கலெக்டர் வினய் ஒதுக்கியுள்ளார்.கலெக்டர் அலுவலகத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்களுடனான கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது. இந்திய மருத்துவ சங்க மதுரை கிளை தலைவர் அழகுவெங்கடேசன், செயலாளர் அமானுல்லா முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பேசியதாவது:தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள், படுக்கைகள்உள்ளிட்ட விவரங்களை தினமும் மாலை 6:00 மணிக்குள் தந்துவிட வேண்டும். கொரோனா அறிகுறியுடன் வருவோரை அனுமதிக்க தனி வார்டு ஏற்படுத்த வேண்டும். அதற்கென்று தனி நுழைவு வாயில் இருக்க வேண்டும். லேசான பாதிப்புள்ள நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தி கவனிக்கலாம். நோயாளிகளுக்கு ஆக்சிஜன், வெப்பநிலை அளவிடும் கருவியை வழங்குவது கட்டாயம், என்றார்.கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டால் கவனிக்க தனி மையத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்என டாக்டர்கள் வலியுறுத்தினர். கலெக்டர், மதுரை, தோப்பூர் அரசு மருத்துவமனைகளில் ஒரு பகுதியை ஒதுக்கி உத்தரவிட்டார். நலப்பணிகள் இணை இயக்குனர் வெங்கடாச்சலம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ், டாக்டர்கள் நடராஜன், அருண்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X