தமிழ்நாடு

இனி, 'வாய்யா... போய்யா' கூடாது! போலீசாருக்கு அறிவுறுத்திய அதிகாரி

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
அவிநாசி:சாத்தான்குளம் சம்பவத்தின் தொடர்ச்சியாக, அவிநாசி போலீசாருக்கு, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கைது நடவடிக்கைக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.திருப்பூர் கூடுதல்எஸ்.பி., ஜெயச்சந்திரன், அவிநாசி போலீசாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதில்,
 இனி, 'வாய்யா... போய்யா' கூடாது! போலீசாருக்கு அறிவுறுத்திய அதிகாரி

அவிநாசி:சாத்தான்குளம் சம்பவத்தின் தொடர்ச்சியாக, அவிநாசி போலீசாருக்கு, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கைது நடவடிக்கைக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் கூடுதல்எஸ்.பி., ஜெயச்சந்திரன், அவிநாசி போலீசாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதில், 'புகார் கொடுக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்களை மரியாதை குறைவாக நடத்தக் கூடாது. 'போய்யா... வாய்யா!' என்பது போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.
வழக்குகளை சாதுரிய மாக கையாள வேண்டும்,' என்பது போன்றஅறிவுரை வழங்கப்பட்டது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில், சமூக இடைவெளி பின்பற்றி நடத்தப்பட்ட கூட்டத்தில், டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-ஜூலை-202012:49:23 IST Report Abuse
A.George Alphonse முதலில் இவர்கள் தங்கள் காவல் நிலையத்தில் அவர்களின் கீழ் பணிபுரியும் காவலர்களை வாய்யா,போய்யா என்று பேசுவதை நிறுத்தி மரியாதையாக நடத்தினால் அவர்களும் பொது மக்களை மரியாதையாக நடத்துவார்கள். சினிமாவும், டிவி சீரியல்களும் இதைத்தான் காட்டுகிறார்கள். சினிமாவிலும் டிவி சீரியல்களிலும் காவல்துறையினர் அவர்களின் கீழ் பணிபுரிபவர்களையும்,பொது மக்களையும் மரியாதையாக நடத்துவதுபோல் காட்டினால் போலீஸ் காரர்களுக்கு இதுபோன்ற ஸ்பெஷல் கிளாஸ் தேவை இல்லை.
Rate this:
Cancel
ramu - chennai,இந்தியா
09-ஜூலை-202019:20:19 IST Report Abuse
ramu அடிக்கடி இதை போல் வகுப்புகள் எடுத்து அறிவுரைகள் வழங்க வேண்டும்..
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
08-ஜூலை-202020:14:39 IST Report Abuse
சோணகிரி மிகச்சரியான அறிவுரை... காவல் துறையினர் பொதுமக்களுக்கு எங்குமே உரிய மரியாதையை வழங்குவதில்லை. காவல் துறையினர் மற்றவர்களை மதித்தால் தான் அவர்கள் மீது மக்களுக்கும் மதிப்பு மரியாதை வரும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X