ஆப்கனில் நில நடுக்கம்: ரிக்டர் 4.6 ஆக பதிவு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020
Share
Advertisement

காபூல்:ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று இரவு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவான நில நடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் அதிர்ந்தன.காபூல் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஹ்மன் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 7.5 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.



latest tamil news



நில நடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்த போதும் மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால்,ஆப்கானிஸ்தானில் உள்நாடு போர் நடைபெறுவதால் அந்நாடு முழுவதும் தினமும் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அரங்கேறி வருகிறது. சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும்போது சம்பவம் நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிர்வுகள் உணரப்படும். ஆகவே, மக்கள் இந்த நில நடுக்கத்தையும், அருகே ஏதோ குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெறுகிறது என நினைத்துக்கொண்டனர். பின்னர் அதிர்வு தொடர்ந்து நீடித்ததால் இது நில நடுக்கம் என்ற முடிவுக்கு வந்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.


latest tamil news



ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X