பொது செய்தி

தமிழ்நாடு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அபுதாபியில் இருந்து 179 பேர் சென்னை வருகை

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

சென்னை: ஐக்கிய அரபு நாடான - யு.ஏ.இ.,யில் சிக்கித் தவித்த, 179 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஊடரங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்ப 'வந்தே பாரத்' என்னும் திட்டத்தை துவக்கியது. இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்களை பல நாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் இந்தியர்கள் மீ்ட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் 36 வினமானங்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) தலைநகரான அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக 179 பயணிகள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அதன்படி, நேற்று காலை, 7:30 மணிக்கு, சென்னை வந்த அவர்களுக்கு, பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில், விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர். விதிமுறைக்கேற்ப தனிமைப்படுத்துதலுக்காக அழைத்து செல்லப்பட்டனர்.


latest tamil news
விமான சேவைகள் ரத்து


மேற்குவங்க மாநில அரசு, டில்லி, மும்பை, சென்னை, நாக்பூர், ஆமதாபாத், புனே ஆகிய, ஆறு நகரங்களில் இருந்து, இம்மாதம், 6ம் தேதி முதல், 19ம் தேதி வரை, அம்மாநிலத்திற்கு விமானங்கள் இயக்க தடை விதித்துள்ளது. அதனால், சென்னையில் இருந்து, கோல்கட்டா, பேக்டோக்ரா நகரங்களுக்கு செல்ல வேண்டிய, ஐந்து விமானங்கள்; அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய, ஐந்து விமானங்கள் என, 10 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று, 26 விமானங்கள், பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து, 25 விமானங்கள் சென்னைக்கு வந்தன.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
07-ஜூலை-202015:41:13 IST Report Abuse
Baskar 179 இந்தியர்கள் சென்னை வந்தனர் நல்லது. அவர்கள் வரும்போது 179 கோரோனோக்களையும் கூட கொண்டு வந்தார்களா என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-202017:02:02 IST Report Abuse
DUBAI- Sivagangai babu KalyanDon't think all NREs Have corona. here also test going on before enter flight (48 hours) need Corona test result as negative. This is UAE. we are following here 100% rules and corona prevention...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-ஜூலை-202012:16:25 IST Report Abuse
மலரின் மகள் ஒரு கோடி பேர் காத்திருக்க சில நூறு பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அப்படி என்றால் எந்த செய்தி பெரிது படுத்தப்படவேண்டும்.
Rate this:
Cancel
joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூலை-202010:37:58 IST Report Abuse
joy வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்கள் எங்கே தனிமை படுத்த படுகிறார்கள். விவரம் கிடைக்குமா??
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-ஜூலை-202012:16:46 IST Report Abuse
மலரின் மகள்சென்னையின் பல்வேறு இடங்கள் உண்டு. நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாதாரண கல்லூரி விடுதிகள் வரை. தங்குமிடம் இலவசத்திலிருந்து பல ஆயிரங்கள் வரை. ஜூன் முதல் வாரத்தில் வந்தவர்கள் தனியார் நிகர் நிலை பல்கலையின் தாம்பரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள அவர்களின் சில விடுதிகளில் தங்க வைக்கப்பட்டார்கள், ஒரு குடும்பத்திற்கு ஒரு அரை என்ற விகிதத்தில். ஐந்து நாட்களில் அவர்கள் அனுமதி கொடுக்கப்பட்டு அவர்கள் சொந்த மாவட்டத்து தலைநகரில் ஒரு சாதாரண பகுதியில் மூன்று நாட்கள் தங்க வைக்கப்பட்டார்கள் அதன் பிறகு அவர்களை முழுதும் அனுமதித்து வீட்டில் இரண்டு வாரங்கள் தனிமை படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். எனது தோழியர்கள் சிலர் குடும்பத்துடன் பெங்களூரில் லீலா ஓட்டலில் இரண்டு வாரங்கள் முழுவதுமாக தங்கி விட்டு தான் வெளியில் செல்ல அனுமதிகிடைக்க பட்டார்கள். நாம் வந்து இறங்கும் சர்வதேச விமான நிலையம் மற்றும் செல்லும் இடம் போன்ற வற்றை பொறுத்து ஒவ்வொரு நாளும் விதிகள் மாறி கொண்டே இருக்கின்றன. இப்போதைக்கு கேரளா பக்கம் வந்து இறங்க வேண்டாம். நான்கு வாரங்களுக்கு நீங்கள் தனிமைப்படுத்தும் முகாமில் போலீஸ் மற்றும் செயலிகள் கண்காணிப்பில் மிகவும் கடுமையாக கண்காணிக்கப்படுவீர்கள், ஒரு விதத்தில் சிறைபோன்றது என்று சொல்கிறார்கள். எந்த தேசத்தில் இருந்து வந்தார்கள் என்பதும் கடந்த மூன்று மாதங்களில் அவர்களின் பயண விபரங்களும் அதை விட மிக முக்கியமாக செய்துவருகின்ற தொழிலும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது தனிமைப்படுத்தி காலத்தை தீர்மானிக்க. சவர தொழில், ஓட்டல் தொழில் மற்றும் மருத்துவம் சார்ந்தவர்கள் அதிகம் கண்காணிக்கப்படுவார்கள். அரசின் போக்க இந்த விஷயத்தில் வேறு விதமாக இருப்பதாக பலர் சொல்கிறார்கள் அதாவது ஒரு பத்து பேர் வந்தால் அவர்களுக்கு நடக்கும் தனிமைப்படுத்துதல் அரசின் கெடுபிடிகளை அவர்கள் ஆயிரம் பேருக்கு சொல்லி அவர்கள் மேலும் பலர் தாயகம் வந்து விடாமல் தகவலை பரப்பினால் நல்லது என எண்ணுவதை போல இருப்பதாக சொல்கிறார்கள் எனக்கு தெரிந்த பலர் தாயகம் திரும்பி தனிமையில் சங்கடங்களை சந்தித்தவர்கள். ஏப்ரல் மாதத்து முடிவில் இரண்டு வார தனிமைப்படுத்தும் விடுதிகளின் கட்டணம் இரட்ணஉவகையாக ரூ 15,000 மற்றும் ரூ 30,000 ஆகா இருந்தது. விமான நிலையத்திலேயே இருவகையான பகுதிகள் உண்டு. உங்கள் பட்ஜெட் தகுந்தபடி அங்கேயே பதிந்து செல்லலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X