பொது செய்தி

இந்தியா

அரசின் தங்க சேமிப்பு பத்திர வெளியீடு: ஒரு கிராம் ரூ.4,852 ஆக நிர்ணயம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், நான்காம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, நேற்று துவங்கியது. இது, வரும், 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சந்தைகளில், அதிக ஏற்ற இறக்கம் நிலவும் இந்த காலகட்டத்தில், பாதுகாப்பான முதலீட்டுக்கு ஒரு வாய்ப்பாக, அரசின் இந்த தங்க பத்திர வெளியீடு வந்துள்ளது.latest tamil newsஇது குறித்து, முக்கியமான சில விபரங்கள்:1அரசின், நான்காம் கட்ட தங்க பத்திர வெளியீடு, வரும், 10ம் தேதியுடன் முடிவடைகிறது.

2 இந்த நான்காம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு, 4,852 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 பத்திர வெளியீட்டு அறிவிப்புக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு, வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

4 வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, ஒரு கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். இதனால், 'கிரெடிட், டெபிட்' கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க பத்திரங்களை வாங்குவோருக்கு, ஒரு கிராம், 4,802 ரூபாய்க்கு கிடைக்கும்.

5 இந்த தங்க பத்திரங்கள், வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும்.


latest tamil news6 மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், ஒரு 'யூனிட்' என்ற கணக்கில் வழங்கப்படும்.

7 நடப்பு நிதியாண்டில், இந்த தங்க பத்திரங்கள், ஆறு கட்டங்களாக, ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட உள்ளது.

8 பொதுவாக, உள்நாட்டில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும்போது, அரசு இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும். கடந்த, 1ம் தேதி, முன்பேர சந்தையில், 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 48 ஆயிரத்து, 982 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

9 தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு, ஆண்டு வட்டி விகிதம், 2.50 சதவீதமாக வழங்கப்படுகிறது. இந்த வட்டி வருமானம், முதலீட்டாளரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வரி விதிக்கப்படும்.

10 தங்க பத்திரங்களின் முதிர்வு காலம், எட்டு ஆண்டுகள் ஆகும். இருப்பினும், முதலீட்டாளர்கள் ஐந்தாம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற விருப்பம் இருப்பின் வெளியேறலாம்.

11 இந்த தங்க பத்திர முதலீட்டில், முதிர்ச்சியின்போது , மூலதன ஆதாய வரி விதிக்கப்படாது என்பது, வேறு எதிலும் இல்லாத தனிப்பட்ட சிறப்பாகும்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pats - Coimbatore,இந்தியா
07-ஜூலை-202014:46:18 IST Report Abuse
Pats கடன் வங்கியும் வாங்கலாம்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-ஜூலை-202010:29:25 IST Report Abuse
Girija உதவாக்கரை திட்டம் .. சேரிக்கும் சேர வேண்டும் அதுக்கொரு பாட்டுப்படி ... இதில் சாமானியர்கள் ஏன் மேல் நடுத்தர மக்கள் கூட முதலீடு செய்ய மாட்டார்கள் . 1. மக்களின் நிஜ தேவை அவசரத்திற்கு உடனடி பணம் .......ஐந்து ஆண்டுகள் ஒன்றும் செய்யமுடியாது என்றால் அஜீரண பணக்காரர்கள் வேண்டுமானால் பினாமி பெயரில் முதலீடு செய்யவர் . 2. உதாரணத்திற்கு ஒரு நடுத்தர குடும்பம் கையில் ஒன்று ..இரண்டு என்று .... பத்து லட்சம் உள்ளது என்று வைத்துக்கொள்ளவோம், அவர்கள் எத்ரிநோக்கி இருக்கும் செலவு திட்டம் வீடு / நிலம் / பெண்ணிற்கு திருமணம் என்ற நிலையில் இருக்கும் போது, எப்பொழுது அமையும் என்ற தெரியாத போது அவர்கள் எப்படி இந்த ஐந்து வருடத்திற்குள் மாட்டிக்கொள்ளவர் ? அதுவம் டிஜிட்டலில் ? 3. அடிதட்டு மக்கள் உதாரணத்திற்கு வருவோம், வீடு வேலை செய்பவர்கள் , சிறு வியாபாரம் செய்பவர்கள், விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள், அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் இந்த திட்டம் மொபைல் ரீசார்ஜ் போன்று சுலபமாக இருக்க வேண்டும் ..........அதற்கான எளிய நடைமுறைகள் இல்லை . 4. இன்று ஒரு கிராம் தங்கம் அரசு நிர்ணயித்த விலையில் ஒரு சாதாரண மக்கள் வாங்கினால், அவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு முதிர்வு அன்று என்ன அதிகபட்ச விலையாக இருந்தாலும் அதை அந்த ஒரு கிராம் மாக தான் தரவேண்டும் .ஒருவேளை தங்கத்தின் விலை அதல பாதாளத்திற்கு போய் இருந்தால் நியமான வட்டி விகிதத்தில் அவர்களுக்கு முதலீட்டை திருப்பி தரவேண்டும். 4. இன்னும் விளக்கமாக சொன்னால் நான் இன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் , நான் அதை எட்டு ஆண்டுகளுக்குள் அந்த திட்டத்தில் விலகினால் எப்போது வேண்டுமானாலும் அந்த முதலீடு தொகையை மட்டும் பணமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று இருக்க வேண்டும். அதுவும் வங்கியின் கவுண்டர்கலில் காசோலை பரிவர்த்தனை போல் பெற்றுக்கொள்ள வசதி செய்ய்ய வேண்டும் . இப்படி ஒரு திட்டம் வந்தால் நாட்டில் செயின் கொள்ளைகள் , வீடு புகுந்து கொள்ளையடிப்பதும் குறையும். 5. எனது இந்த கருத்துக்களை ஒரு தீம் அவுட் லைனாக வைத்துக்கொண்டு இந்த திட்டத்தை இன்னும் மேன்மையாக்கி செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம் . 4. கரோனா காலம் முடியும் வரை தங்கத்தின் மீது ஆதார் சான்றிதழுடன் வட்டியில்லா தங்க கடன் அதிக பட்சம் நபர் ஒருவருக்கு பத்தாயிரம் என்று வழங்கும் முறை வர வேண்டும். ஒருவர் கடங்கா பெற அன்றைய மதிப்பில், ஒரு லட்சம் ருபாய் தங்கம் கொண்டு வருகிறார் என்றால் அவருக்கு அதன் மதிப்பில் எழுபதாயிரம் அல்லது எண்பதாயிரம் கடன் பெற்ற முடிந்தாலும் , அவர் மாதம் தோறும் பத்தாயிரம் வீதம் ஏழு அல்லது எட்டு மாதகால அவகாசத்தில் தான் பணம் பெறமுடியும் . இதனால் வெளியில் உள்ள தங்கம் முழுவதும் அம்மா சொல்லறேன் கேளுங்க அக்கா சொல்றேன் கேளுங்க வில் முழுவதும் விற்கப்பட்டு , நடுத்தர மக்கள், நடுத் தெருவிற்கு போகாமல் பாதுகாக்கப்படுவர். சிட்பண்ட் நிதி நிறுவன மோசடி குறையும் .
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
07-ஜூலை-202007:28:32 IST Report Abuse
Muraleedharan.M காசு இருந்தால் வாங்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X