கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' வகுப்பு வழிமுறை: 15க்குள் மத்திய அரசு வெளியீடு

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
online classes, corona crises, e learning, coronavirus, covid 19, tamil nadu, dinamalar news, madras high court

சென்னை:'மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, வரும், 15ம் தேதிக்குள் வழிமுறைகள் வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனு:பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படு கின்றன. மொபைல் போன், மடிக்கணினியை, மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அப்போது, ஆபாச இணைய தளங்களால் கவனம் சிதைவதற்கு வாய்ப்பு உள்ளது.


latest tamil news



முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாமல், ஆன்லைனில் வகுப்புகள் நடத்த, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.வழக்கறிஞர் விமல் மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.

இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகினர்.

மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ''ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக, உரிய வழிமுறைகளை, வரும், 15ம் தேதிக்குள், மத்திய அரசு வெளியிட உள்ளது,'' என்றார்.இதையடுத்து, விசாரணையை, வரும், 20ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
07-ஜூலை-202016:26:50 IST Report Abuse
R S BALA ஆன்லைன் கல்வி எல்லோருக்கும் பொதுவானது அல்ல, அனைவரிடமும் மடிக்கணினி இல்லை ,மொபைல் இருந்தாலும் அதன் செயல்முறை பெற்றோர்களுக்கு தெரியவில்லை ... இதில் ஆபாச இணையத்தளம் பற்றியெல்லாம் எங்கே தெரிய போகிறது ...
Rate this:
Cancel
07-ஜூலை-202016:20:55 IST Report Abuse
rasheed ஆன்லைன் வழிமுறை நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள் அவர்களுக்கு வேண்டியது பணம் பணத்தால் என்ன வேண்டும் செய்வார்கள் இதுவரை கோடி கணக்கில் சம்பாதித்து இருப்பார்
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
07-ஜூலை-202014:43:19 IST Report Abuse
தமிழர்நீதி உலகின் நோய்த்தாக்கம் நேரம், கல்வியை ஆன்லைன் தான் தரமுடியும். தரமான கணினி, கண்காணிப்பு சிறுவர்களை உச்சம் எடுத்து செல்லும். வாந்தி எடுக்கும் கரஸ்பான்டன்ஸ் கோர்சில் மேதாவியாகும் கூமுட்டை ஆசிரியர்கள், கல்வி வியாபாரிகள் இந்த ஆன்லைன் கல்வியால் காணாமல் போவார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X