ஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்!

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

வாஷிங்டன்: பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு ஹாங்காங் அரசு விடுத்த கோரிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



latest tamil news



சுமார் 75 லட்சம் மக்கள் வசிக்கும் ஹாங்காங்கில், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீன அரசு கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர், கோஷமிடுவோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம். அத்துடன், சீனாவுக்கு நாடு கடத்தவும் சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு ஹாங்காங் அரசு பேஸ்புக் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news



'ஹாங்காங்கில் சீனா அமல்படுத்தியுள்ள புதிய பாதுகாப்பு சட்டம் குறித்த மதிப்பீடு நிலுவையில் இருக்கிறது.முறையாக மனித உரிமைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து மனித உரிமை நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கருத்து சுதந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமை என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அவர்களின் பாதுகாப்பு அல்லது பிற விளைவுகளுக்கு பயமின்றி தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமையை ஆதரிக்கிறோம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு டிஜிட்டல் உரிமைகள் குழுவான ப்ரோபிரைவசி (Proprivacy) ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இது 'பிராந்தியத்தில் டிஜிட்டல் தனியுரிமை மற்றும் மனித உரிமைகள் இரண்டிற்கும் கிடைத்த வெற்றி எனவும், பங்குகள் உயர்ந்த நிலையில் இருந்தும், தண்டனைகள் மிகக் கடுமையாகவும் இருக்குமென்றாலும், வாட்ஸ் ஆப் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக இருப்பது மிகப்பெரிய செய்தி' என தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவான பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை, சீனாவை போன்று ஹாங்காங்கில் வாட்ஸ் ஆப்பிற்கு தடை விதிக்க வழிவகுக்குமென கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
07-ஜூலை-202018:32:26 IST Report Abuse
Parthasarathy Ravindran இங்கு இருக்கும் ஆயோகிய கம்யூனிஸ்டுகள் எங்க கூறுவார்கள். பேச்சு சுதந்திரத்தை பற்றி இங்கு பிதற்றுவார்களே . எல்லோரும் ஊமை ஆகி விட்டார்களா.
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
07-ஜூலை-202013:11:05 IST Report Abuse
Gandhi சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு மாபியா போன்றவர்கள் , சீனா மக்களுக்கும் எந்த பொருளாதார பயனும் இல்லை எந்த சுகந்திரமும் இல்லை, உலக மக்களும் பாதுகாப்பில்லை . உலக நாடுகள் ஓன்று சேர்ந்து சீனா மாபியா அரசை கவிழ்க்க வேண்டும்
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
07-ஜூலை-202010:49:47 IST Report Abuse
mindum vasantham Hongkong enbathu நம்மூர் பாண்டிச்சேரி மாதிரி பிரெஞ்சுக்கு சொந்தம் இல்லை அது இந்தியாவுக்கு சொந்தம் அது போல் தான் ஹாங்காங் சீனாவுக்கு சொந்தம் அதில் தேவை இல்லாமல் மேற்கெதிய நாடுகள் தலை விட்டதால் தான் உலகில் கடந்த நன்கு மாதங்களாக பிரச்னை
Rate this:
07-ஜூலை-202014:11:38 IST Report Abuse
பாலாஎப்படி சீனாவில் தடைசெய்யப்பட்ட Whatsapp, Facebook ஹாங்காங்கில் செயல்படுகிறது?...
Rate this:
07-ஜூலை-202014:11:39 IST Report Abuse
பாலாஎப்படி சீனாவில் தடைசெய்யப்பட்ட Whatsapp, Facebook ஹாங்காங்கில் செயல்படுகிறது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X