பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

Updated : ஜூலை 07, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
pakistan, china, pok, pakistan occupied kashmir, பாகிஸ்தான், சீனா, ஆக்கிரமிப்பு காஷ்மீர், அணை, போராட்டம், பேரணி,

முசபராபாத் : ஜீலம் மற்றும் நீலம் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்ட பாகிஸ்தான், சீனாவிற்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.


latest tamil news



கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜீலம் நீலம் ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு 2.4 பில்லியன் டாலர் செலவாகும். இந்த திட்டத்திற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முசாபராபாத் நகரில், பல இடங்களில் போராட்டம் நடந்தது மிகப்பெரிய பேரணியும் நடந்தது.


latest tamil news



போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாகிஸ்தான் சீனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த அணை கட்டுமானத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். சர்ச்சைக்குரிய பகுதியில், எந்த சட்டத்தின் அடிப்படையில் அணை கட்டுவதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தானும்,சீனாவும் ஐ.நா., விதிகளை மீறியுள்ளன. அணை கட்டுமானத்தை நிறுத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.


latest tamil news




இந்த பிரச்னையை சர்வதேச அளவிற்கு எடுத்து செல்லும் வகையில் டுவிட்டரில் ''#SaveRiversSaveAJK'' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramona - london,யுனைடெட் கிங்டம்
07-ஜூலை-202017:09:34 IST Report Abuse
Ramona 18 நாடுகளில் நில அபகரிப்பு செய்த சீ சீனாவை, அமெரிக்கா நினைத்தால் ஒரு வழி பண்ணலாம். அந்த நாள் எப்போது வருமோ.
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
07-ஜூலை-202016:14:00 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga ஒரு பக்கம் ரஷ்யாவோட வ்ளாடிவாஸ்தாக் நகரம் எங்களுக்கு சொந்தம்னு தகராறு. மங்கோலியாவின் பெரும்பகுதியை ஆகிரமிப்பு, தைவான், ஹாங்காங், மியான்மார், இந்தியா, பூட்டான், திபெத், அப்படீன்னு சுத்துப்பட்டற எல்லா நாடுகளுடனும் வாய்க்கால் தகராறு. இப்போது, இந்தியாவின் "பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர்" பகுதியில் புதிதாக ஒரு அணையை கட்ட சீனா முயல்கிறது. இது சீன பாகிஸ்தான் எக்கனாமிக் கொரிடோர் "பெல்ட் ரோடு இனிஷீட்டிவ்" அடிப்படையில் கட்டப்படுகிறது என்றாலும் இதற்கு இந்தியாவின் ஒப்புதல் மிக அவசியம். தற்போது அங்கு வாழும் உள்ளூர் மக்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மொத்தத்தில் உலக நாடுகளால் சீனாவை முழுவதுமாக ஒதுக்கும் நாள் விரைவில் இல்லை.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-ஜூலை-202016:01:24 IST Report Abuse
வெகுளி முதலில் AJK என்று உளறுவதை நிறுத்துங்கள்..... இந்தியா உதவும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X